கிரீஸில் வெள்ளம்: 800-க்கும் அதிகமானோர் பத்திரமாக மீட்பு!

கிரீஸில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 800-க்கும் அதிகமானோர் கடந்த இரண்டு நாள்களில் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தீயணைப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரீஸில் வெள்ளம்: 800-க்கும் அதிகமானோர் பத்திரமாக மீட்பு!

கிரீஸில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 800-க்கும் அதிகமானோர் கடந்த இரண்டு நாள்களில் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தீயணைப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரீஸில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையால் நாட்டின் பல பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளத்தினால் சாலைகள் சேதமடைந்துள்ளன. கார்கள் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டன. கிரீஸ் மட்டுமல்லாது அண்டை நாடுகளான பல்கேரியா, துருக்கி போன்ற நாடுகளும் கனமழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று நாடுகளிலும் கனமழை வெள்ளத்துக்கு இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். 

வெள்ள பாதிப்புகள் தொடர்பாக தீயணைப்புத் துறை சார்பில் கூறியதாவது: மக்களை நீரில் குதித்து விரைந்து காப்பாற்றுவதற்காக பயிற்சி பெற்ற வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். ராணுவமும் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சாலைகள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டபோதிலும், மீட்புப் படை வீரர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கனமழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் வெள்ள நீர் 2 மீட்டர் உயரம் வரை இருக்கிறது. மீட்புப் பணியில் படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வெள்ள நீரின் வேகம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் படகினை இயக்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது. தொடர்ச்சியாக மின்னல் இருப்பதால் ஹெலிகாப்டரை இயக்குவதும் சிக்கலாக உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com