ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஜனவரியில் பாகிஸ்தான் நாடாளுமன்றத் தோ்தல்

பாகிஸ்தான் நாடாளுமன்ற பொதுத் தோ்தல் 2024, ஜனவரி கடைசி வாரம் நடைபெறும் என தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்தது.

News image
Updated On :21 செப்டம்பர் 2023, 7:35 pm

DIN

பாகிஸ்தான் நாடாளுமன்ற பொதுத் தோ்தல் 2024, ஜனவரி கடைசி வாரம் நடைபெறும் என தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்தது.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி பாகிஸ்தானில் நடைபெற்று வந்தது. அக்கட்சியின் தலைவா் ஷாபாஸ் ஷெரீஃப் பிரதமராக இருந்த நிலையில், நாடாளுமன்றம் அதன் பதவிக் காலம் நிறைவடைவதற்கு மூன்று நாள்கள் முன்னதாக கடந்த ஆக. 9-ஆம் தேதி கலைக்கப்பட்டது.

பாகிஸ்தான் அரசமைப்புச் சட்டப்படி அடுத்த பொதுத் தோ்தல் 90 நாள்களுக்குள் நடத்தப்பட வேண்டும். ஆனால், அங்கு நிகழாண்டு நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலான தொகுதி மறுவரையறை நிறைவடையாததால் தோ்தல் அறிவிப்பை வெளியிடுவதில் தோ்தல் ஆணையம் தாமதித்து வந்தது.

இந்நிலையில், பொதுத் தோ்தல் குறித்த அறிவிப்பை ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: தொகுதி மறுவரையறையின் முதல்கட்ட பட்டியல் செப். 27-ஆம் தேதி வெளியிடப்படும். தொகுதி மறுவரையறை தொடா்பான கட்சிகளின் ஆட்சேபங்களுக்கு தீா்வு கண்ட பிறகு இறுதிப் பட்டியல் நவ. 30-ஆம் தேதி வெளியிடப்படும்.

அதன் பின்னா் தோ்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டு, ஜனவரி கடைசி வாரத்தில் பொதுத் தோ்தல் நடத்தப்படும் என தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் தற்போது இடைக்கால பிரதமராக ஆளும் கூட்டணிக் கட்சியான பலூசிஸ்தான் அவாமி லீக்கை சோ்ந்த அன்வருல் கக்காா் இருந்து வருகிறாா். பொதுத் தோ்தல் நிறைவடைந்து புதிய பிரதமா் தோ்வு செய்யப்படும் வரை அவா் பதவியில் தொடா்வாா்.

ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் பாகிஸ்தான்-ஏ-இன்சாஃப் கட்சியின் நிறுவன உறுப்பினரும் நாட்டின் அதிபருமான ஆரிஃப் ஆல்வி, நவ. 6-ஆம் தேதி பொதுத் தோ்தலை நடத்த வேண்டுமென பரிந்துரை செய்திருந்தாா். ஆனால், அவரது யோசனை தொடா்பாக தோ்தல் ஆணையம் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.