
காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் கடந்த சில வாரங்களாக நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,200-ஐ கடந்துள்ளது. இது குறித்து காஸா சுகாதாரத் துறை அûமச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காஸாவில் கடந்த அக். 7-ஆம் தேதி முதல் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,248-ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும், குழந்தைகளும் ஆவர்.
இது தவிர, இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்; 7,600-க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காஸா உயிரிழப்புகள் குறித்து பிராந்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிடும் புள்ளிவிவரங்கள் குறித்து சிலர் சந்தேகம் எழுப்பினாலும், அவை நம்பிக்கைக்கு உரியவை என்றே அங்குள்ள சர்வதேச அமைப்புகள் கூறி வருகின்றன.
முந்தைய காஸா போர்களின்போது அமைச்சகம் வெளியிட்ட உயிரிழப்பு விவரங்கள், ஐ.நா. மற்றும் இஸ்ரேலின் புள்ளிவிவரங்களுடன் ஒத்துப்போனது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.