இஸ்ரேல் ராணுவத்தின் அநீதி?

பாலஸ்தீனர்களை இஸ்ரேல் தடுத்து வைத்துள்ள புகைப்படங்கள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
இஸ்ரேல் ராணுவம் | AP
இஸ்ரேல் ராணுவம் | AP
Published on
Updated on
1 min read

இஸ்ரேல் ராணுவம் வடக்கு காஸாவில் ஹமாஸ் பிரிவினரைச் சேர்ந்தவர்கள் எனச் சந்தேகிக்கும் பாலஸ்தீனர்களைத் தடுத்து வைத்துள்ளது. அதே வேளையில் தெற்கு காஸாவில் மிகக் குறுகிய பரப்புக்குள் லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

வடக்கு காஸாவின் பீட் லஹியா பகுதியில் சந்தேகத்துக்குரிய பாலஸ்தீனர்களை இஸ்ரேல் தடுத்து வைத்துள்ள புகைப்படங்கள் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

பாலஸ்தீன ஆண்கள் மேலாடைகளின்றி உள்ளாடையுடன் கண்கள் மற்றும் கைகள் கட்டப்பட்டு அமர வைக்கப்பட்டுள்ளனர். அவர்களைச் சுற்றிலும் இஸ்ரேல் ராணுவத்தினர் உள்ளனர். இவர்களை ராணுவம் விசாரித்து வருகிறது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனர்கள் | AP Video Capture
தடுத்து வைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனர்கள் | AP Video Capture

ஐ.நா நோக்கர்கள், இஸ்ரேலிய படைகள் 15 வயதுக்கு மேல் உள்ள சிறுவர்கள் மற்றும் ஆண்களை முகாம்களில் தடுத்து வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஐநாவில் கொண்டு வரப்பட்ட போர் நிறுத்தத் தீர்மானத்துக்கு பாதுகாப்பு அவையில் உள்ள 15 நாடுகளில் 13 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன. அமெரிக்கா எதிராக வாக்களித்துள்ளது. பிரிட்டன் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. 

ஐ.நா பொதுச் செயலர், அன்டானியோ குட்டரெஸ், காஸா உடையும் தருவாயில் உள்ளதாகவும் ஒட்டுமொத்த மனித அமைப்பே உருக்குலையும் அபாயம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மனிதநேய முயற்சிகள் காஸாவில் தோல்வியடைந்துவிட்டதாக ஐ.நா மனிதநேய பிரிவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் செய்வதற்கு அங்கு எதுவுமில்லை என கைவிரித்துள்ளனர்.

தெயிர் அல்-பலா மருத்துவமனையில் காயமுற்ற பாலஸ்தீன தாய் மற்றும் மகன் | AP
தெயிர் அல்-பலா மருத்துவமனையில் காயமுற்ற பாலஸ்தீன தாய் மற்றும் மகன் | AP

மூன்றாவது மாதத்தில் நீடிக்கும் இந்தப் போரில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 17,400-ஐக் கடந்துள்ளது. அவர்களில் 70 சதவீதம் பெண்கள் மற்றும் குழந்தைகள் என காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் தரப்பில் 93 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அக்.7 ஹமாஸ் தாக்குதலில் 1200-க்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com