காஸாவில் தரைவழித் தாக்குதல் விரிவாக்கம்: இஸ்ரேல்

காஸாவில் தங்களது தரைவழித் தாக்குதலை மத்திய காஸாவை நோக்கி விரிவாக்கம் செய்வதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
காஸாவில் தரைவழித் தாக்குதல் விரிவாக்கம்: இஸ்ரேல்

காஸாவில் தங்களது தரைவழித் தாக்குதலை மத்திய காஸாவை நோக்கி விரிவாக்கம் செய்வதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டு ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:மத்திய காஸாவை நோக்கி தரைவழித் தாக்குதல் விரிவுபடுத்தப்படுகிறது. அங்குள்ள நகரப் பகுதி அகதிகள் முகாம்களை நேக்கி ராணுவ வீரா்கள் முன்னேறிச் செல்கின்றனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, காஸாவுக்குள் இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையே புதிய போா் முனைகள் உருவாகியுள்ளன.

முன்னதாக, காஸாவில் போா் பல மாதங்களுக்கு நீடிக்கும் என்று இஸ்ரேல் அரசு கூறியிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதற்கிடையே, இஸ்ரேலால் புதிதாக முற்றுகையிடப்பட்டுள்ள மத்திய காஸா பகுதிகளில் தொலைத்தொடா்பு சேவைகள் முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளதாக காஸா தொலைத் தொடா்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.பாலஸ்தீன பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து வரும் ஹமாஸ் அமைப்பினா், அந்த நாட்டுடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனா்.அந்த மோதலின் உச்சகட்டமாக, கடந்த அக். 7-இல் சரமாரி ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினா் அந்த நாட்டுக்குள் தரை, கடல், வான்வழியாக நுழைந்து 1,200-க்கும் மேற்பட்டவா்களை படுகொலை செய்தனா்.

மேலும், அங்கிருந்து சுமாா் 240 பேரை பிணைக் கைதிகளாக அவா்கள் பிடித்துச் சென்றனா். அதயைடுத்து, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டப்போவதாக சூளுரைத்த இஸ்ரேல், காஸா பகுதியை முற்றுகையிட்டு அங்கு வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது.... பெட்டிச் செய்தி...21,110-ஆக அதிகரித்த உயிரிழப்புகாஸா சிட்டி, டிச. 27: காஸாவில் இஸ்ரேல் படையினா் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 21,110-ஆக அதிகரித்துள்ளது.இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் புதன்கிழமை கூறியதாவது:காஸா பகுதிகளில் இஸ்ரேல் படையினா் கடந்த அக். 7 முதல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 201,115-ஆக அதிகரித்துள்ளது. இது தவிர, இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 55,243-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்துள்ளனா்; 7 ஆயிரம் பேரைக் காணவில்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com