காஸா புதைகுழியாக மாறும்: ஹமாஸ் சூளுரை!

இன்னும் சில நாள்களில் மேலும் சில பிணைக்கைதிகளை விடுவிப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான ஜபாலியா அகதிகள் முகாம்
தாக்குதலுக்கு உள்ளான ஜபாலியா அகதிகள் முகாம்

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே களத்தில் நேரடியாக மோதல் தொடங்கியிருக்கும் நிலையில் இருபக்கமும் கணிசமான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

ஹமாஸின் ஆயுதக் குழு, செவ்வாய்கிழமை (அக்.31) வெளியிட்டுள்ள குறிப்பில் தங்களின் பிடியில் இருக்கும் வெளிநாட்டவர் சிலரை இன்னும் சில நாள்களில் விடுவிப்பதாகவும் தரைவழியே முன்னேற தொடங்கியிருக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கு காஸா மரணக்குழியாக மாறும் எனவும் தெரிவித்துள்ளது.

“இடையீட்டாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். வெளிநாட்டவர் சிலரை இன்னும் சில நாட்களில் விடுதலை செய்வோம். எதிரிகளின் படைவீரர்கள், அரசியல் மற்றும் ராணுவ தலைமை ஆகியோருக்கு காஸா மயானமாகவும் புதைகுழியாகவும் மாறும்” என அல்-காஸம் பிரிவின் செய்தி தொடர்பாளர் அபு ஒபேதா தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் பிடியில் 240 பிணைக்கைதிகள் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அவர்களில் 5 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

காஸாவில் தொடர்ந்து தாக்குதல் நடந்து வரும் நிலையில் வான் வழி தாக்குதலையும் தரை வழி தாக்குதலையும் ஒரே நேரத்தில் மேற்கொண்டு வருகிறது, இஸ்ரேல்.

இதுவரை காஸாவின் அமைச்சகம் சார்பில் 8,525 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 3500 பேர் குழந்தைகள் என்பது அதிர்ச்சிக்குரியதாக உள்ளது. 

அகதிகள் முகாமில் பெரியதான ஜபாலியா முகாமில் தாக்குதல் நடத்தப்படுள்ளது. இதில் 50-க்கும் மேற்பட்ட கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உயிரழந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com