பெண்களை வைத்து பாலஸ்தீனர்களைக் கைது செய்யும் இஸ்ரேல்!

மேற்குக் கரையில் இஸ்ரேல் ராணுவத்தின் கைது நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன.
இஸ்ரேல் ராணுவம்
இஸ்ரேல் ராணுவம்

காஸாவில் 33-வது நாளாகப் போர் தொடர்ந்து வருகிறது. காஸா மட்டுமில்லாது இஸ்ரேலின் ஆதிக்கத்தில் உள்ள மேற்குக் கரை பகுதியில் ஹமாஸ் ஆதரவாளர்கள் எனக் கருத்தப்படுகிறவர்கள் மீது தாக்குதலும் கைது நடவடிக்கைகளும் தொடர்ந்து வருகின்றன. 

நவ.7 அன்று மேற்குக் கரையில் கைது நடவடிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹெப்ரானில் இரண்டு பத்திரிக்கையாளர்கள் உள்பட பலரை ராணுவம் கைது செய்து தடுத்து வைத்துள்ளது. அந்தப் பகுதிகளில் கள நிலவரம் அளிப்பதற்கு பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

பாலஸ்தீன பத்திரிக்கையாளர் கூட்டமைப்பு ஐநாவிற்கு அளித்த அறிக்கையில் இதுவரை 30 பத்திரிக்கையாளர்கள் போர் ஆரம்பித்தது முதல் பலியாகியுள்ளதைச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

பெண்களையும் குடும்ப உறுப்பினர்களையும் கைது செய்து பாலஸ்தீனர்களைச் சரணடைய ராணுவம் வலியுறுத்தி வருகிறது. இந்தச் சோதனைகளில் குழந்தைகள் கூட தப்பவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com