எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் பெண் தலைவர் பலி

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அரசியல் பிரிவின் முக்கிய பெண் தலைவர் கொல்லப்பட்டுள்ளார். 

News image
ஹமாஸ் பெண் தலைவர் ஜமீலா அல் சாந்தி
Updated On :20 அக்டோபர் 2023, 10:45 am

DIN

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அரசியல் பிரிவின் முக்கிய பெண் தலைவர் கொல்லப்பட்டுள்ளார். 

எல்லைத் தாண்டி இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் கடந்த அக். 7ல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.

இதையடுத்து காஸா மீது தரைவழித் தாக்குதலை மேற்கொள்ளவும் ஆயத்தமாகி வருகிறது இஸ்ரேல். 

இந்த போரினால் பாலஸ்தீனியர்கள் இதுவரை 3,785 பேர் கொல்லப்பட்டதாகவும் கிட்டத்தட்ட 12,500 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஹமாஸ் தரப்பு தெரிவித்துள்ளது. 

அதுபோல, இஸ்ரேலில் 1,400 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 203 பேர் ஹமாஸிடம் பிணைக் கைதிகளாக உள்ளனர் என்று இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். 

இந்த தாக்குதலில் ஹமாஸ் படையினர் முக்கிய பெண் தலைவர் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் ஹமாஸ் தரப்பு இதனை உறுதி செய்துள்ளது. 

ஹமாஸ் அரசியல் பிரிவில் இருந்த ஒரே பெண் தலைவரான ஜமீலா அல் சாந்தி நேற்று(வியாழக்கிழமை) கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காஸாவில் உள்ள அவரது வீட்டை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த 2004ல் இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்ட ஹமாஸின் இணை நிறுவனர் அப்தெல் அஜிஸ் அல்-ரன்டிசியின் மனைவி ஆவார். ஹமாஸ் குழுவின் பெண்கள் அமைப்பின் நிறுவனர். காஸாவில் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் உறுப்பினராகவும் இருந்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.