இஸ்ரேல்- ஹமாஸ்: புதிய நிபந்தனைகளுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை!

எகிப்தின் முயற்சி: இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த உடன்படிக்கை
கான் யூனிஸுக்கு திரும்பும் பாலஸ்தீனர்கள்
கான் யூனிஸுக்கு திரும்பும் பாலஸ்தீனர்கள்

போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கான புதிய திட்ட முன்மொழிவை இஸ்ரேல்- ஹமாஸ் இருதரப்புக்கும் அளித்துள்ளதாக எகிப்து செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

ஆறு மாத காலமாக தொடர்ந்துவரும் இஸ்ரேல்- ஹமாஸ் போரில் மத்தியஸ்தம் மேற்கொண்டுவரும் எகிப்து நாட்டின் கெய்ரோவில் இரு தரப்பு பிரதிநிதிகளிடம் இந்த உடன்படிக்கைக்கான முன்மொழிவு அளிக்கப்பட்டதாக எகிப்து தெரிவித்தது.

ஆறு வாரத்துக்கான போர் நிறுத்தம், ஹமாஸ் பிணைக்கைதிகள் 40 பேர் விடுதலை, 700 பாலஸ்தீன கைதிகள் விடுதலை ஆகியவற்றை நிபந்தனைகள் இடம்பெற்றுள்ளன.

இரு தரப்பினருமிடையே அவர்கள் விடுதலை செய்யவிருக்கும் கைதிகளின் பட்டியலை எகிப்து கேட்டுள்ளதாக தெரிவித்தது.

மேலும், காஸாவில் போரினால் தெற்குப் பகுதி நோக்கி இடம்பெயர செய்யப்பட்ட பாலஸ்தீனர்கள் மீண்டும் வடக்குக் காஸாவுக்கு வருவதற்கான நிபந்தனையும் இந்த முன்மொழிவில் இடம்பெற்றுள்ளது.

வடக்கு பகுதியிலிருந்து மக்கள் இடம்பெயர்வதைத் தடுக்க இஸ்ரேல் நிறுவியுள்ள சோதனை தடுப்புகளை நீக்க வேண்டிய நிலை ஏற்படும்.

ஹமாஸ் இதனை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com