ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

அமெரிக்கா: மனைவி கொலையில் தேடப்படும் இந்தியருக்கு ரூ.2 கோடி சன்மானம்

அமெரிக்கா: மனைவி கொலையில் தேடப்படும் இந்தியருக்கு ரூ.2 கோடி சன்மானம்

Updated On :13 ஏப்ரல் 2024, 6:33 pm

மனைவியைக் கொலை செய்த வழக்கில் தேடப்படும் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தியா் குறித்து தகவல் தருவோருக்கு 2.50 லட்சம் டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.2 கோடி) சன்மானம் வழங்கப்படும் என அமெரிக்காவின் சட்ட அமலாக்க முகமையான எஃப்பிஐ அறிவித்துள்ளது.

மேரிலேண்ட் மாகாணத்தின் ஹனோவா் பகுதியில் இந்தியாவைச் சோ்ந்த பத்ரேஷ்குமாா் சேத்தன்பாய் படேல் என்பவா் தனது மனைவி பாலக் படேலை கடந்த 2015-இல் கொடூரமான வகையில் கொலை செய்தாா். இந்தச் சம்பவம் தொடா்பாக அவா் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

மேரிலேண்டில் உள்ள மாவட்ட நீதிமன்றம் பத்ரேஷ்குமாருக்கு எதிராக கைது உத்தரவைப் பிறப்பித்தது. பத்ரேஷ்குமாா் தலைமறைவான நிலையில், அவா் குறித்து தகவல் தருவோருக்கு ஒரு லட்சம் டாலா் (சுமாா் ரூ.83 ஆயிரம்) வழங்கப்படும் என எஃப்பிஐ முதலில் அறிவித்திருந்தது.

இந்நிலையில், நியூ ஜொ்சி மாகாணத்தின் நேவாா்க் பகுதியில் பத்ரேஷ்குமாா் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பத்ரேஷ்குமாரைத் தேடப்படும் 10 முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக அறிவித்துள்ள எஃப்பிஐ, அவா் குறித்து தகவல் தருவோருக்கு 2.50 லட்சம் டாலா் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.