மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

மாமனார் கொடுத்த பரிசு.. நான் கேட்டது இதைத்தான்: வைரலாகும் பாகிஸ்தான் வீரரின் பேட்டி

மாமனார் தனக்கு எருமை மாட்டை பரிசாக அளித்திருக்கிறார் என்று பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரரின் பேட்டி வைரலானது.

News image

அர்ஷத் நதீம்

Updated On :16 ஆகஸ்ட் 2024, 6:13 am

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில், ஈட்டி எறியும் பிரிவில் பாகிஸ்தான் நாட்டுக்காக முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்ற அர்ஷத் நதீமுக்கு அவரது மாமனார் மிகச் சிறப்பான பரிசொன்றை அளித்திருக்கிறார்.

தனது பண்ணையிலிருந்து ஒரு எருமை மாட்டினை, நாட்டுக்காக தங்கப் பதக்கம் வென்று வந்த மருமகனுக்கு கடந்த வாரம் பரிசாக அளித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

அர்ஷத் நதீமின் மாமனார் முகமது நவாஸ், மருமகனின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், அவர்களது பாரம்பரிய முறைப்படி, அன்புப் பரிசாக எருமை மாட்டை வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். இது அவர்கள் முறைப்படி மிக மரியாதைக்குரிய பரிசாகும்.

கடந்த வாரம் இந்த பரிசு வீட்டுக்கு வந்த நிலையில், அண்மையில் உள்ளூர் ஊடகத்துக்கு தனது மனைவியுடன் அர்ஷத் அளித்த நேர்காணலில் அது பற்றிய சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்

இது குறித்து அர்ஷத் நதீம் கூறுகையில், எங்கள் முறைப்படி, ஒரு மருமகனுக்கு எருமை மாட்டினை, மாமனார் பரிசளிப்பது என்பது மிகவும் மதிக்கத்தக்கது, மரியாதைக்குரியது என்று பெருமிதத்துடன் கூறியிருக்கிறார்.

கடந்த வாரம் இந்த பரிசு, நதீமுக்கு வழங்கப்பட்டிருந்தாலும், நதீமும் அவரது மனைவியும் அளித்த பேட்டி தற்போதுதான் வைரலாகியிருக்கிறது.

அந்த நேர்காணலில், நதீம் கூறுகிறார், தனது தந்தை எருமை மாட்டினை பரிசளிப்பது பற்றி மனைவி கூறியதும், நான் எருமை மாடா? அவர் எனக்கு 5 - 6 ஏக்கர் நிலத்தையே கொடுக்கலாம்... சரி.. எருமை மாடும் பரவாயில்லைதான். கடவுள் அருளால், அவர் சற்று வசதி படைத்தவர், அதனால் எனக்கு எருமை மாடு பரிசளித்துள்ளார் என்று சிரித்தபடி கூறியிருக்கிறார்.

அவர் இவ்வாறு கூறியதைக் கேட்டு நேர்காணல் நடத்திக்கொண்டிருந்தவரும் சிரிக்கிறார்.

அர்ஷத் நதீமின் மாமனார், முகமது நவாஸ் சிறிய கிராமம் ஒன்றில் தனது நான்கு மகன்கள் மற்றும் மூன்று மகள்களுடன் வசிக்கிறார். அவர்கள் பாரம்பரிய முறைப்படி, ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற மருமகனுக்கு எருமை மாட்டினை அளித்துள்ளார்.

சர்வதேச விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும்கூட, நதீம் எந்த மாற்றமும் இல்லாமல், தங்களது குடும்பத்துடன் எளிமையாகவே வாழ்க்கையைத் தொடர்ந்து வருகிறார். நவாஸ் மகள் ஆயிஷாவை, நதீம் திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒருமகள் உள்ளனர். நதீமும் தனது பெற்றோர் மற்றும் சகோதரனுடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.