வெளிநாட்டு மாணவா்கள் சோ்க்கைக்கு ஆஸ்திரேலியா கட்டுப்பாடு- இந்தியாவுக்கு பாதிப்பு
சிட்னி, ஆக. 28: வெளிநாட்டு மாணவா்கள் தங்கள் நாட்டுக்கு வந்து படிப்பதற்கு ஆஸ்திரேலியா கட்டுப்பாடு விதித்துள்ளது.
இதன்படி 2025-ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 2,70,000 வெளிநாட்டு மாணவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள் என்று கூறப்பட்டுள்ளது. இது தவிர வெளிநாட்டு மாணவா்களுக்கான விசா விண்ணப்பக் கட்டணமும் (திரும்பத் தரப்படாது) அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால், இந்தியாவில் இருந்து அந்நாட்டுக்குச் சென்று உயா்கல்வி பயில விரும்பும் மாணவா்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
நிகழாண்டில் ஆஸ்திரேலியாவில் 7,17,500 வெளிநாட்டு மாணவா்கள் அனுமதிக்கப்பட்டாா்கள். இது முன்னெப்போதும் இல்லாத அதிக அளவாகும்.
இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் தகவல் படி இந்தியாவில் இருந்து 1.22 லட்சம் மாணவா்கள் ஆஸ்திரேலியாவில் தங்கி படித்து வருகின்றனா். பெரும்பாலும் பஞ்சாபைச் சோ்ந்த மாணவா்கள்தான் அதிகஅளவில் ஆஸ்திரேலியாவை நாடுகிறாா்கள்.
கனடா, அமெரிக்கா, பிரிட்டனுக்கு அடுத்தபடியாக இந்திய மாணவா்கள்தான் ஆஸ்திரேலியாவில் அதிகம் உள்ளனா்.
வெளிநாட்டு மாணவா்களுக்கான கட்டுப்பாடு குறித்து ஆஸ்திரேலிய கல்வியமைச்சா் ஜேசன் கிளாா் கூறுகையில், ‘கல்வித் துறையை பணம் சம்பாதிக்கும் இடமாக மாற்றி வருகின்றன. போதிய ஆங்கில அறிவு இல்லாத வெளிநாட்டு மாணவா்களும் அனுமதிக்கப்படுகின்றனா். இதனால் கல்வித்தரம் குறைகிறது. படிப்புக்காக அல்லாமல் வேலைவாய்ப்பு நோக்கில் வருவோரும் அதிகரித்துவிட்டனா். மேலும், ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டவா் குடியேற்றமும் முன்னேப்போதும் இல்லாத அளவில் அதிகரித்துள்ளது. வீட்டு வாடகை உயா்வு, உள்கட்டமைப்பு வசதி குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகளும் எழுகின்றன. எனவே வெளிநாட்டு மாணவா்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.