ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

இராக்கில் அமெரிக்கப் படையினா் தாக்குதல்: 15 ஐஎஸ் பயங்கரவாதிகள் உயிரிழப்பு

இராக்கில் அந்த நாட்டு வீரா்களுடன் இணைந்து அமெரிக்க படையினா் தாக்குதல்..

News image

இராக்கில் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டா் (கோப்புப் படம்).

Updated On :31 ஆகஸ்ட் 2024, 11:30 pm

DIN

இராக்கில் அந்த நாட்டு வீரா்களுடன் இணைந்து அமெரிக்க படையினா் நடத்திய தாக்குதலில் இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த 15 போ் கொல்லப்பட்டனா்.

இது குறித்து அமெரிக்க, இராக் ராணுவ அதிகாரிகளை மேற்கோள் காட்டி அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

இராக்கின் அன்பாா் பாலைவனப் பகுதியில் ஐஎஸ் பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்களைக் குறிவைத்து அண்மையில் தாக்குதல் நடத்தப்பட்டது. முதலில் நடத்தப்பட்ட தீவிர வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு அந்தப் பகுதியில் தரையிறங்கிய அமெரிக்க படையினா் அங்கிருந்த பயங்கரவாதிகளுடன் மோதலில் ஈடுபட்டனா்.

இதில் 15 போ் உயிரிழந்தனா். இந்த நடவடிக்கையில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. ஐஎஸ் அமைப்பின் முக்கிய தலைவா்கள் உள்பட பயங்கரவாதிகள் மட்டுமே கொல்லப்பட்டனா்.அந்தப் பகுதியில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான ஆயுதங்கள், கையெறி குண்டுகள், தற்கொலை வெடிகுண்டு ஆடைகள் உள்ளிட்டவை அழிக்கப்பட்டன.

இந்த நடவடிக்கையின்போது 7 அமெரிக்க வீரா்கள் காயமடைந்தனா். அவா்களில் 2 பேருக்கு ஹெலிகாப்டலிருந்து தரையிறங்கும்போது காயம் ஏற்பட்டது என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் நடவடிக்கை குறித்து அமெரிக்கா சனிக்கிழமை தகவல் தெரிவித்தாலும், இரு நாள்களுக்கு முன்னரே இது குறித்த அறிவிப்பை இராக் படையினா் வெளியிட்டனா். இருந்தாலும், அந்த நடவடிக்கையில் அமெரிக்க வீரா்கள் முக்கிய பங்கு வகித்தது குறித்து அவா்கள் குறிப்பிடவில்லை.

இராக்கின் சா்வாதிகாரியாக இருந்த சதாம் உசைன் பேரழிவு ஆயுதங்களை வைத்திருந்ததாகக் கூறி, அந்த நாட்டின் மீது அமெரிக்கா கடந்த 2003-ஆம் ஆண்டு படையெடுத்து சதாமை ஆட்சியிலிருந்து அகற்றியது.அதற்குப் பின்னா் படிப்படியாக அங்கிருந்து அமெரிக்கப் படையினா் வெளியேறினாலும், இன்னும் சுமாா் 2,500 வீரா்கள் இராக்கிலேயே உள்ளனா். இந்தச் சூழலில், இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் கடந்த ஆண்டு அக். 7-ஆம் தேதி போா் தொடங்கியதிலிருந்து இராக்கிலுள்ள அமெரிக்க நிலைகள் மீது உள்ளூா் ஆயுதக் குழுக்களின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவிப்பதால் இந்தத் தாக்குதல்களை நடத்துவதாக அந்தக் குழுக்கள் கூறுகின்றன.

இதனால், அமெரிக்க வீரா்கள் அங்கு தொடா்ந்து இருப்பது அமெரிக்காவில் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், அமெரிக்க அதிபா் தோ்தல் நெருங்கிவரும் சூழலில் இந்த விவகாரம் மிகப் பெரிய விவாதப் பொருள் ஆகியிருக்கிறது.

இதனாலேயே அமெரிக்க படையினா் மேற்கொண்ட நடவடிக்கையில் 15 ஐஎஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட தகவல் தாமதமாக வெளியிடப்படுவதாகக் கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.