மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கெட்டுப்போன குளுக்கோஸ் பாக்கெட்டுகள்? மெக்சிகோவில் 13 குழந்தைகள் பலி

மெக்சிகோவில் 13 குழந்தைகள் பலியான சம்பவத்தில் கெட்டுப்போன குளுக்கோஸ் பாக்கெட்டுகள் காரணமா?

News image
13 குழந்தைகள் பலி
Updated On :6 டிசம்பர் 2024, 12:39 pm

DIN

மெக்ஸிகோ: 14 வயதுக்கு உள்பட்ட 13 குழந்தைகள் பலியான சம்பவத்தில் கெட்டுப்போன குளுக்கோஸ் பாக்கெட்டுகள் காரணமாக இருக்கலாம் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக குறிப்பிட்ட ஒரு மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் குளுக்கோஸ் பாக்கெட்டுகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று நாடு முழுவதுமிருக்கும் மருத்துவமனைகளுக்கு மெக்ஸிகோ சுகாதாரத் துறை அறிவுறுத்தியிருக்கிறது.

இன்னமும் குழந்தைகளின் மரணத்துக்கான உண்மையான காரணம் கண்டறியப்படாவிட்டாலும் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த குழந்தைகளின் மரண அறிக்கையில், அனைத்து விதமான நோய் எதிர்ப்பு மருந்துகளையும் தகர்க்கும் க்ளெப்சியெல்லா ஆக்ஸிடோகா என்ற பாக்டீரியா காரணமாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இறந்த குழந்தைகள் அனைத்தும் ரத்த நாள தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்ததாகவும், இதுவரை 20 குழந்தைகளுக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டு, அதில் 13 குழந்தைகள் மரணமடைய, மற்ற குழந்தைகள் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.