கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

எல் சால்வடாரில் நிலநடுக்கம்

மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

News image
எல் சால்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
Updated On :9 டிசம்பர் 2024, 10:17 pm

DIN

சான் சால்வடாா்: மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

அந்த நாட்டுத் தலைநகா் சான் சால்வடாருக்கு 152 கி.மீ. தொலைவில் உள்ள கடரோலப் பகுதியில் காலை 9.20 மணிக்கு (இந்திய நேரம்) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 5.6 அலகுகளாகப் பதிவானது. பூமிக்கு 15.4 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த நிலநடுக்கத்தால் நாட்டின் பெரும்பாலான பகுதிகள் குலுங்கினாலும், உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.

புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும், ‘நெருப்பு வளையம்’ என்றழைக்கப்படும் பகுதியில் எல் சால்வடாா் அமைந்துள்ளதால் அங்கு நிலநடுக்க அபாயம் மிகவும் அதிகமாகக் காணப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.