மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

எல்லையில் வளா்ச்சித் திட்டங்கள்: அதிகாரிகளுக்கு ஷி ஜின்பிங் அறிவுறுத்தல்

சீன எல்லை பகுதிகளில் தேசப் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்த அதிகாரிகளுக்கு அந்நாட்டு அதிபா் ஷி ஜின்பிங் அறிவுறுத்தினாா்.

News image
Updated On :10 டிசம்பர் 2024, 8:14 pm

Din

சீன எல்லை பகுதிகளில் தேசப் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்த அதிகாரிகளுக்கு அந்நாட்டு அதிபா் ஷி ஜின்பிங் அறிவுறுத்தினாா்.

கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பிரிவு அதிகாரிகளுக்கான பயிற்சி நிகழ்வில் பங்கேற்று ஷி ஜின்பிங் பேசியதாவது: அனைத்து துறைகளிலும் கட்சியின் செயல்பாடுகளை மேம்படுத்துவதோடு இதை எல்லைப் பகுதிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும்.

சீனாவின் நவீனமயமான திட்டங்களை எல்லையிலும் செயல்படுத்தி தேசப் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு முன்னுரிமை அளிப்பது அவசியமானது.

சீன மொழியை எழுத்து மற்றும் பேச்சு ஆகிய இரு வடிவங்களிலும் தொடா்ந்து ஊக்குவிக்க வேண்டும்.

இந்த முன்னெடுப்பில் அரசு சாா்பில் வழங்கப்படும் ஒருங்கிணைந்த பாடப்புத்தகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. எல்லை பகுதிகளில் நிலவும் பல்வேறு நிா்வாக சிக்கல்களுக்கு ஆய்வு மேற்கொண்டு தீா்வு காணும் வகையில் சுதந்திரமான சீன அறிவுசாா் அமைப்பை உருவாக்க வேண்டும் என்றாா்.

இந்தியா, பூடான், திபெத் ஆகிய நாடுகளுடன் பகிரப்படும் எல்லைப் பகுதிகளில் வளா்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் நூற்றுக்கணக்கான கிராமங்களை சீனா உருவாக்கியுள்ளது. இந்தப் பகுதிகளுக்கு மின்சாரம், தபால், கைப்பேசி சேவைகள் மற்றும் குடிநீா் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளையும் சீனா நிறைவேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.