திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

காஸாவில் வான்வழித் தாக்குதல்: 16 பாலஸ்தீனர்கள் பலி!

இஸ்ரேல் நடத்திய குண்டுவெடிப்பு பற்றி..

News image

வான்வழித் தாக்குதல்

Updated On :19 டிசம்பர் 2024, 1:53 pm IST

வடக்கு காஸாவில் இஸ்ரேல் நடத்திய குண்டுவெடிப்பில் 16 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவித்துள்ளது.

ஜபாலியா நகரில் புதன்கிழமை இரவு அல்-நஜ்ஜார் என்பவர் வீட்டின் மீது இஸ்ரேலிய விமானம் குண்டுவீசித் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். சிலர் காயமடைந்தனர்.

மேலும், காஸா நகரின் அல்-தாபியின் பள்ளிக்கு அருகில் உள்ள அல்-சாய்துனியா குடும்பத்தின்மீது இஸ்ரேல் குண்டுவீச்சு காரணமாக மேலும் 6 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவங்கள் குறித்து இஸ்ரேலிய ராணுவம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையில், காஸா பகுதி முழுவதும் இஸ்ரேலிய தாக்குதல்களில் 24 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய வட்டாரங்கள் தெரிவித்தன.

வடக்கு காசாவில் ஒரு தனி சம்பவத்தில், ஜபாலியா பகுதியில் பாலஸ்தீனர்களை குறிவைத்து இஸ்ரேலிய ஆளில்லா விமானம் தாக்கியதில் மேலும் இருவர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர்.

மேலும், வடக்கு காஸாவில் உள்ள அல்-அவ்தா மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகாலையில் பெய்ட் லாஹியா நகரில் உள்ள கட்டடத்தின் மீது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஒரு துணை மருத்துவர் கொல்லப்பட்டதாகக் கூறியது.

அக்டோபர் 7, 2023 அன்று தெற்கு இஸ்ரேலிய எல்லை வழியாக ஹமாஸ் தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடி கொடுக்க காசா பகுதியில் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் பெரிய அளவிலான தாக்குதலை நடத்தி வருகிறது, இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 250 பேர் பணயக் கைதிகளாக இருந்தனர்

காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் பலஸ்தீனர்களின் பலி எண்ணிக்கை 45,097 ஆக உயர்ந்துள்ளதாக காஸா சுகாதார அதிகாரிகள் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.