சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

நள்ளிரவில் காஸா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்! 9 பேர் பலி!

காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டது குறித்து...

palestinians killed in gaza

காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட தாயின் உடல் அருகில் படுகாயங்களுடன் அமர்ந்திருக்கும் பாலஸ்தீன சிறுவன்... - AP

Published On :

காஸா மீது நள்ளிரவில் இஸ்ரேலிய படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா படைகளுக்கும் இடையே போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், திடீரென காஸா மீது இஸ்ரேலிய படைகள் கடந்த புதன்கிழமை (ஜூன் 3) நள்ளிரவு வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளன.

காஸாவின் பல்வேறு முக்கிய பகுதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய 4 வான்வழித் தாக்குதலில் 2 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் உள்பட 9 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கடந்த 2025 அக்டோபர் மாதம் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர்நிறுத்தம் கொண்டுவரப்பட்டதற்குப் பிறகு அவ்வப்போது இஸ்ரேலிய படைகள் பாலஸ்தீனர்கள் வசிக்கும் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.

காஸாவில், போர்நிறுத்தம் அமல்படுத்தப்பட்ட பிறகு இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் மட்டும் இதுவரை 936 பேர் கொல்லப்பட்டதாக, காஸாவின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

nine people were killed in an Israeli airstrike on Gaza conducted at midnight.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.