வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தரையிறங்கும் போது தீப்பிடித்த கனடா விமானம்: பெரும் விபத்து தவிர்ப்பு!

கனடா விமான விபத்து குறித்து...

News image
விபத்துக்குள்ளான விமானம்
Updated On :29 டிசம்பர் 2024, 12:44 pm

DIN

கனடா நாட்டைச் சேர்ந்த விமானம் ஒன்று தரையிறங்கும்போது தீப்பிடித்து அதன் இறக்கை பாதிப்படைந்த நிலையில் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ஏர் கனடா நிறுவனத்தின் விமானம் (எண் 2259) கனடாவின் நியூஃபவுண்ட்லேண்ட் தீவின் செயின்ட் ஜான் நகரில் இருந்து ஹாலிஃபாக்ஸ் விமான நிலையத்திற்குநேற்று சென்றது.

கனடா நேரப்படி நேற்று இரவு 9.30 மணியளவில் தரையிறங்கும் நேரத்தில் சக்கரம் ஒன்று பழுதானதால் 20 டிகிரி இடதுபுறம் சாய்ந்த கோணத்தில் விமானத்தின் இறக்கை தரையில் உரசியபடி தீப்பிடித்துள்ளது. இந்த விபத்து காரணமாக அதிக சத்தம் எழும்பியதால் பயணிகள் உள்ளிட்ட விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

ஓடுபாதையில் குறிப்பிட்ட தூரம் வரை விமானம் தரையில் இறக்கையை உரசியபடியே சென்றதால் தீப்பிடித்து விமானம் பாதிப்புக்குள்ளாகுமோ என பயணிகள் அச்சமடைந்தனர்.

ஆனால், விமானம் நின்றவுடன் பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். காயமடைந்த சில பயணிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.

விமானத்தில் எத்தனைப் பயணிகள் இருந்தனர் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இந்த சம்பவம் நடைபெற்றவுடன் ஹாலிஃபாக்ஸ் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்துக்குப் பின் விமான ஓடுதளம் மீண்டும் திறக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.