கூகுள்
கூகுள்

கூகுள்: ஏஐ பயிற்சிக்காக ரூ.224 கோடி ஒதுக்கீடு!

ஐரோப்பாவில் ஏஐ திறன் மேம்பாடுக்காக கூகுள் நிதி ஒதுக்கியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுக்காக 27 மில்லியன் அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் ரூ.224 கோடி) அளிக்கவுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏஐ வாய்ப்புகளை முன்னெடுக்கும் திட்டத்தின்கீழ் ஐரோப்பா முழுவதும் உள்ள பின்தங்கிய பணியாளர்களை திறன் ரீதியாக மேம்படுத்த 10 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, “ஐரோப்பா முழுவதும் உள்ள மக்கள் ஏஐ சார்ந்து அறிவு, திறன் மற்றும் நம்பிக்கை பெறுவதற்கு இந்த திட்டம் உதவும்” என கூகுள் உடன் இணைந்து பணியாற்றும் இலாப நோக்கமற்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அட்ரியன் பிரவுன் தெரிவித்துள்ளார்.

இந்த முன்னெடுப்பு ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கவில் புத்தாக்க நிறுவனங்களை வளர்க்கும் கூகுளின் பயிற்சி மைய திட்டங்களையும் உள்ளடக்கியது.

மேலும், ஏஐ சார்ந்த வாய்ப்புகளை உருவாக்கும் முன்னெடுப்பை 18 மொழிகளுக்கு விரிவுப்படுத்தவுள்ளது கூகுள்.

இந்த பயிற்சிகள் இலவசமாக கிடைக்கவுள்ளதாகவும் மக்கள் மற்றும் நிறுவனங்கள் ஏஐ குறித்த அறிமுகம் பெறவும் இயல்பு வாழ்க்கையில் அவற்றின் திறன் மற்றும் அறிவு பயன்படுத்துவதை மேம்படுத்தவும் கூகுள் திட்டமிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com