குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தாய்லாந்து முன்னாள் பிரதமர் நாளை விடுதலை!

தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா நாளை(பிப்.18) விடுதலை செய்யப்படுவார் என பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் தெரிவித்தார்.

News image

பிரதமர் தக்சின் ஷினவத்ரா

Updated On :17 பிப்ரவரி 2024, 4:41 pm IST

பாங்காக் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா நாளை(பிப்.18) விடுதலை செய்யப்படுவார் என தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் தெரிவித்தார்.

ஷினவத்ரா கடந்த 2001 முதல் 2006 வரை தாய்லாந்தின் பிரதமராக இருந்தார். சர்ச்சைக்குரிய அரிசி மானிய திட்டத்தின் மூலம் அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய வழக்கில் தாய்லாந்து முன்னாள் பிரதமருக்கு சிறைத் தண்டனை விதித்தது.

இந்த வழக்கில் சிறைத் தண்டனையிலிருந்து தப்புவதற்காக, 15 ஆண்டுகள் வெளிநாட்டிலிருந்து கடந்தாண்டு நாடு திரும்பினார் தக்சின். பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆகஸ்ட் 2023 முதல் அவர் காவலில் வைக்கப்பட்டார்.

இந்த நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக பாங்காக் சிறையிலிருந்து ஆறு மாதங்கள் மருத்துவமனை காவலில் வைக்கப்பட்டார். அவரின் உடல் நலக் குறைபாடு காரணமாக எட்டு ஆண்டு சிறைத் தண்டனையை மகா வஜிரலோங்கோர்ன் மன்னர் ஓராண்டாகக் குறைத்தார்.

இந்த வாரத் தொடக்கத்தில் தக்சினுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ள நிலையில் நாளை(பிப்.18) விடுவிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.