அமேசான் மழைக்காடுகளில் புதிய வகை பச்சை அனகோன்டா பாம்பு இனத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த பாம்பு 26 அடி உயரமும், 200கிலோ எடையும் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதுவே உலகின் மிகப்பெரிய பாம்பு எனக் கூறப்படுகிறது.
விஞ்ஞானி மற்றும் பேராசிரியர் ஃரீக் வோன்க் அமேசான் காட்டிற்குள் உலகின் மிகப்பெரிய பாம்பைக் கண்டறிந்துள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்ட காணொலியில், அவர் தண்ணீருக்குள் நீந்தி, தண்ணீருக்குள்ளே இருக்கும் மிகப்பெரிய பாம்பினருகே செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அந்தக் காணொலியில் அவர், 'உலகின் மிகப்பெரிய பாம்பு இதுதான். கார் டயர் அளவுக்கு அகலமும், 200 கிலோ எடையும் கொண்டுள்ளது. அதன் தலை, என் தலை அளவுக்கு உள்ளது.' எனக் கூறியுள்ளார்.
மேலும், '7.5 மீட்டர் உயரமும், 500 கிலோ எடைகொண்ட பாம்புகள் கூட இங்கிருப்பதாக வௌராணி மக்கள் தெரிவிக்கின்றனர்' என மருத்துவர் பிரயன் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.