காலணி அழுக்காகக்கூடாதா? ஆள்வைத்து மேடைக்குச் சென்ற இசைக்கலைஞர்!

காலணி அழுக்காகக் கூடாது என்பதற்காக கச்சேரி மேடை வரை பாதுகாவலர்களை தூக்கிச்செல்ல வைத்த இசைக்கலைஞர்
 கலீத் முகமது காலித்தும் பாதுகாவலர்களும்
கலீத் முகமது காலித்தும் பாதுகாவலர்களும்

காலணி அழுக்காகக் கூடாது என்பதற்காக கச்சேரி நடத்த வேண்டிய மேடை வரை பாதுகாவலர்களை தூக்கிச்செல்ல வைத்த இசைக்கலைஞருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

அமெரிக்காவைச் சேர்ந்த இசைக்கலைஞர் கலீத் முகமது காலித். சுயமாக ஆல்பம் பாடல்கள் தயாரிப்பதோடு மட்டுமின்றி 10க்கும் மேற்பட்ட பல முன்னணி இசைத் துறை நிறுவனங்களுக்கு இசைப்பதிவும் செய்து கொடுத்து வருகிறார்.

சமீபத்தில் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகானத்திலுள்ள மியாமி பகுதியில் இசைக்கச்சேரி ஒன்றை நடத்தியுள்ளார். காரிலிருந்து கச்சேரி நடைபெறும் மேடைக்கு நடந்துசென்றால் காலணிகள் அழுக்காகிவிடும் என்பதற்காக, பாதுகாவலர்களை அழைத்து மேடை வரை தூக்கிச்செல்ல வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பரவியது. காலணி அழுக்காகிவிடக்கூடாது என்பதற்காக ஆள் வைத்து தூக்கிச்செல்லவைப்பது அபத்தமானது என பலர் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

பிரபலம் என்பதற்காக இது முட்டாள்தனம் இல்லை என்றாகிவிடாது என்றும், இதற்காக பாதுகாவலர்களுக்கு தனி ஊதியம் ஏதும் தரப்போவதில்லை எனவும் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com