ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சிறிய அளவிலான அலைகள் கரையோர பகுதிகளை தாக்கி வருகின்றன.
ஜப்பானின் மேற்குப் பகுதியில் இன்று பகல் 12 மணிக்கு மேல் ரிக்டர் அளவில் 3.5 முதல் 7.6 வரை அடுத்தடுத்து 20-க்கும் அதிக முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதால் சாலைகளில் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர். பல்வேறு சாலைகளும் சேதமடைந்துள்ளது.
இதையும் படிக்க | ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!
ஹோன்ஷு அருகே 13 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் இஷிகாவா, நிகாடா, டோயாமா மற்றும் யமகட்டா பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு கடலோரப் பகுதி மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், கடற்கரைகளை சிறிய அளவிலான அலைகள் தாக்கு வருவதாகவும், ஒன்று முதல் 5 அடி உயரத்துக்கு ஆக்ரோஷமாக அலைகள் எழுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க | ஜப்பான் நிலநடுக்கம்: ஒன்றாகப் பறந்த பல்லாயிரம் பறவைகள்!
மேலும், சாலைகளிலும் கடல் நீர் புகுந்துள்ளதால் மக்கள் அலறியடித்து ஓடும் காட்சிகள் வேகமாக சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருக்கோடிக்காவலில் திருக்கோடீசுவரா் கோயில் தேரோட்டம்

மனைவி கொலை: கணவரின் உறவினா்களையும் கைது செய்ய கோரி சாலை மறியல்

கத்தியுடன் தகராறில் ஈடுபட்ட இருவரை தடுத்து கைது செய்த உதவி ஆய்வாளருக்கு பாராட்டு

நீட் தோ்வு: புதுகையில் 3,166 மாணவா்கள் எழுதுகின்றனா்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


