

ஜப்பான் மக்கள் பேரிடர்களுக்குத் தயாராக இருக்க்க வேண்டும் என அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக நாட்டு மக்களுக்காக பேசிய ஃபுமியோ கிஷிடா, தொடர் நிலநடுக்கம் ஏற்படுவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் எனவும் எச்சரித்துள்ளார்.
ஜப்பானின் கடற்கரையோர நகரங்களான இஷிக்வா, நிகாடா, டொயாமா பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
நிலநடுக்கத்தின் மையப் பகுதியிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கடற்பகுதிகளில் மிக மோசமான சுனாமி அலைகள் தாக்கக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஒருசில பகுதிகளில் சிறிய அளவிலான சுனாமி அலைகள் தாக்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பானில், காலை 7 மணி முதல், தொடர்ந்து நிலநடுக்கம் உணரப்பட்டு வருவதாகவும், ரிக்டர் அளவில் 4 புள்ளிகளுக்கு மேல் ஏற்பட் நிலநடுக்கம் 20 முறை பதிவாகியிருப்பதாகவும், ரிக்டர் அளவில் 5 புள்ளிகளுக்கு மேல் 7 முறை நிலநடுக்கம் பதிவாகியிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.