காஸா உடனான 3ம் கட்டப் போர் முடிய 6 மாதங்கள்: இஸ்ரேல்

இஸ்ரேல் - ஹமாஸ் படையினருக்கு இடையினால 3ஆம் கட்டப் போருக்கு அடுத்த 6 மாதங்களில் தொடங்கும் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. 
காஸா உடனான 3ம் கட்டப் போர் முடிய  6 மாதங்கள்: இஸ்ரேல்

இஸ்ரேல் - ஹமாஸ் படையினருக்கு இடையினால 3ஆம் கட்டப் போருக்கு அடுத்த 6 மாதங்களில் தொடங்கும் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. 

பாலஸ்தீனத்தின் காஸாவிலுள்ள ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையிலான போர் கடந்த ஆண்டு அக்டோபர் 7 முதல் நடைபெற்று வருகிறது.  இதில் ஹமாஸ் படையினரால் 1,140 பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேலைச் சேர்ந்த 250 பேர் பிணைக் கைதிகளாக்கப்பட்டனர். 

ஹமாஸின் இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, காஸா மீது 3 கட்டங்களாக போர் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டிருந்தது. 

முதல் கட்டமாக ஹமாஸ் படையினரின் தரைவழிப் போக்குவரத்து துண்டிப்பு, பொதுமக்களை வலுக்கட்டாயமாக புலம் பெயரச் செய்வது. இதற்காக வான்வழித் தக்குதல் நடத்தப்பட்டது. 

இரண்டாவது கட்டமாக தரை வழியாக உள் நுழைந்து தாக்குதல் நடத்துவது. இந்தத் தாக்குதலில் சுரங்கம் மற்றும் பதுங்கு குழிகளில் இருந்த ஹமாஸ் படையினர் சுட்டு வீழ்த்தப்பட்டனர். 

மூன்றாவது கட்டமாக டாங்கிகள் மூலம் இஸ்ரேல் ராணுவம் காஸாவினுள் நுழைவது. இது தொடர்பாக பேசிய இஸ்ரேல் ராணுவ அதிகாரி ஒருவர், ராவணுவம் தற்போது 3ஆம் கட்டத் தாக்குதலுக்கு தயாராகியுள்ளது. மூன்றாம் கட்டப் போர் குறைந்தது ஆறு மாதங்களாகும். ஹமாஸ் படையினருக்கு எதிரான தாக்குதல் தீவிரமடையும். காஸாவின் ஷாஜாயாவிலிருந்து அமைதிப் புறாக்கள் பறக்கவிடப்படுவது பற்றி யாரும் பேசவில்லை எனக் குறிப்பிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com