மோடியின் புதிய பதிவு, கூகுளில் அதிகம் தேடப்படும் வார்த்தை!

மோடியின் புதிய பதிவு, கூகுளில் அதிகம் தேடப்படும் வார்த்தை!

பிரதமர் வருகைக்குப் பின்னர் கூகுளில் 'லட்சத்தீவு' எனும் வார்த்தை அதிகம் தேடப்பட்டுள்ளது. 
Published on

பிரதமர் மோடி வருகைக்குப்பின் கூகுளில் லட்சத்தீவு என்ற வார்த்தை அதிகம் தேடப்பட்ட வார்த்தையாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

லட்சத்தீவில் ரூ.1,150 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களைத் துவங்கி வைத்த பிரதமர் மோடி, அங்குள்ள கடலில் நீச்சலடிக்கும் அவரது புகைப்படங்களை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பகிர்ந்தார்.

அதிகாலையில் கடற்கரையில் நடப்பது, மர நாற்காலியில் கடலோரமாக அமர்ந்து இயற்கை அழகை ரசிப்பது போன்ற புகைப்படங்களை 'லட்சத்தீவின் அழகு பிரமிப்பூட்டுகிறது' என்பது போன்ற புகழாரங்களோடு பகிர்ந்திருந்தார்.

அதன் பிறகு கூகுளில் 'லட்சத்தீவு' எனும் வார்த்தை தொடர்ந்து இரண்டாம் நாளாக அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக உள்ளது. 50,000-த்திற்கும் அதிகாமானோர் லட்சத்தீவை கூகுளில் தேடியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com