ரயில் தீ விபத்து: எதிர்க்கட்சி காரணமா?

கடந்த மாதம் இதே போலான ரயில் தீ பிடித்த சம்பவத்தில் எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி மீது அரசு குற்றம்சாட்டியது.
தீ பிடித்த ரயிலில் மீட்புப் பணி | AFP
தீ பிடித்த ரயிலில் மீட்புப் பணி | AFP

தாகா: வங்கதேசத்தில் ரயில் தீ பிடித்ததில் குறைந்தது 5 பேராவது உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எதிர்க்கட்சிகளின் தேர்தல் புறக்கணிப்பின் தொடர்ச்சியாக ரயில் பெட்டிகளுக்குத் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என காவலர்கள் சந்தேகிக்கின்றனர்.

பெனாபோல் எக்ஸ்பிரஸ், வங்க தேசத்தின் வடக்கு நகரமான ஜெச்சூரில் இருந்து தலைநகர் தாகா நோக்கி வந்துகொண்டிருந்த பயணிகள் ரயில். இதில் குறைந்தது நான்கு பெட்டிகளாவது தீ பிடித்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் 5 பேரின் உடல்கள் ரயிலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.  

பழைய தாகாவின் பகுதியின் கோபிபாக் பகுதியில் ரயில் தீ பிடித்ததாகவும் அதிலிருந்து பயணிகளை மீட்க அருகிலிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் ரயிலில் சிக்கியவர்களை மீட்க உதவியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வங்க தேச தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் இது போலியான வாக்கெடுப்பு என எதிர்க்கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்து வருகின்றன.

கடந்த மாதம் இதே போலான ரயில் தீ பிடித்த சம்பவத்தில் எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி மீது அரசு குற்றம்சாட்டியது.

இதனை மறுத்த தேசியவாத கட்சி, ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்கு ஒரு காரணம் தேடி இது போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக தெரிவித்தது.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலகக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com