இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் 100 நாள்களைத் தாண்டி நடந்துகொண்டிருக்கும் நிலையில், இஸ்ரேலின் தெல் அவிவி பகுதியில் 1500க்கும் அதிகமான பெண்கள் தெருக்களில் அணிவகுத்தனர்.
இஸ்ரேல் அரசினை பிணைக் கைதிகளை உடனடியாக மீட்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தும் முழக்கங்களை எழுப்பினர். வலைதளங்களில் பரவிவரும் காணொலிகளில் பெண்கள் குறியீட்டுப் பலகைகளோடு அணிவகுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
"நேரம் தாழ்த்தாதே" "உலகமே விழித்துக்கொள்" என்பது போன்ற சொற்றொடர்கள் எழுதிய பலகைகளை கையில் ஏந்தி அணிவகுத்துச் சென்றனர். பெண்கள் உரிமைகள் அமைப்பு துவங்கிய இந்த அணிவகுப்பில் பல ஆண்களும் கலந்துகொண்டுள்ளனர்.
இதையும் படிக்க: பிணைக்கைதிகளை உயிருடன் மீட்க ஒரே வழி..! : இஸ்ரேல் அமைச்சர்
அக்டோபர் 7 ஹமாஸால் பிடித்துச் செல்லப்பட்ட 253 பிணைக் கைதிகளில் 132 பேர் காஸாவில் இன்னும் இருப்பதாக தெரிவிக்கும் இஸ்ரேல் அரசு, 107 பேர் மட்டுமே உயிருடன் இருக்க வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கிறது.
இஸ்ரேலின் போர் விவகாரத்துறை அமைச்சரான காடி எய்சென்காட், ஹமாஸ் அமைப்பினருடன் ஒப்பந்தம் ஏற்படுத்தி கைதிகளை காப்பாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னை ரயில்வே கோட்டத்தில் 11 புதிய நடைமேம்பாலங்கள்

‘விரைவில் புத்திசாலித்தனமாக மாறுங்கள்’ - ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

பேரூா் பட்டீசுவரா் கோயில் நகை மோசடி: எழுத்தருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

