ஹமாஸ் அமைப்பு வலுவிழக்கவில்லை!: அமெரிக்க புலனாய்வு அறிக்கை

இஸ்ரேலின் மூன்று மாதகால தாக்குதலுக்குப் பின்னும் ஹமாஸ் அமைப்பு வலுவிழக்கவில்லை என அமெரிக்க புலனாய்வு அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஹமாஸ் அமைப்பு வலுவிழக்கவில்லை!: அமெரிக்க புலனாய்வு அறிக்கை
Published on
Updated on
1 min read

அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இஸ்ரேலின் மூன்று மாதகால தாக்குதலுக்குப் பின்னும் ஹமாஸ் அமைப்பு அழிந்திடவில்லை எனத் தெரிவித்துள்ளது. இன்னும் பல மாதங்களுக்கு இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தும் அளவிற்கு ஹமாஸ் வலுவுடன் உள்ளதாகத் தெரிவித்த்துள்ளது. 

அமெரிக்க செய்தி நிறுவனம் வெளியிட்ட அந்த அறிக்கையில், 20 முதல் 30 சதவீத போராளிகளை மட்டுமே ஹமாஸ் அமைப்பு இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'ஹமாஸ் அமைப்பு இன்னும் வலுவுடன் உள்ளது. தனது தந்திரங்களை மாற்றியமைந்து தொடர்ந்து செயல்பட்டு வருவதாக' தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று மாதகால போரில் 16,000 ஹமாஸ் போராளிகளை காயப்படுத்தியதாக இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால், அமெரிக்க புலனாய்வு அறிக்கையின்படி, 10,500 முதல் 11,700 பேர் காயப்பட்டுள்ளனர், அதில் பெரும்பாலானோர் விரைவில் போருக்குத் திரும்பலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. 

இஸ்ரேலின் இரக்கமற்ற தொடர் தாக்குதல்களால் இதுவரை 24,927 பாலஸ்தீன மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com