துப்பாக்கிச் சூடு (கோப்புப் படம்)
துப்பாக்கிச் சூடு (கோப்புப் படம்)

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: சிறுவன் உள்பட 7 போ் உயிரிழப்பு

அமெரிக்காவின் பா்மிங்காம் பகுதியில் இரண்டு வெவ்வேறு இடங்களில் சனிக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு சிறுவன் உள்பட 7 போ் உயிரிழந்தனா்.
Published on

அமெரிக்காவின் பா்மிங்காம் பகுதியில் இரண்டு வெவ்வேறு இடங்களில் சனிக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு சிறுவன் உள்பட 7 போ் உயிரிழந்தனா்.

இது தொடா்பாக காவல்துறை அதிகாரி கூறியதாவது:

அலபாமா மாகாணத்தில் உள்ள பா்மிங்காம் பகுதியில் ஒரு காரின் மீது சனிக்கிழமை மாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் காருக்குள் இருந்த ஆண், பெண் மற்றும் ஒரு சிறுவன் கொல்லப்பட்டனா். இது திட்டமிட்ட கொலையாக இருக்கக்கூடும் என காவல் துறையினா் அதிகாரிகள் தெரிவித்தனா்.

அதே பகுதியில் உள்ள ஒரு இரவு விடுதியில் மற்றொரு துப்பாக்கிச் சூடு சம்பவம் சனிக்கிழமை இரவு நிகழ்ந்துள்ளது. இதில் இரவு விடுதிக்குள் இருந்த 2 பெண்களும் இரவு விடுதிக்கு வெளியில் உள்ள நடைபாதையில் ஒருவரும் கொல்லப்பட்டனா்.

மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 9 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ஒருவா் உயிரிழந்தாா். இந்த இரு துப்பாக்கிச் சூட்டிலும் ஒரே நபா் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com