எல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடு2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்! ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

40 மில்லியன் டன் இடிபாடுகள்: அகற்றவே 15 ஆண்டுகள் ஆகும்! போரில் காஸாவின் அவலம்!

போரில் இடிந்த கட்டடக் குவியல்களை முழுவதும் அகற்ற 15 ஆண்டுகள் ஆகும் என்கிறது ஐ.நா. அவை.

News image
போரில் இடிந்த குடியிருப்பின் முன்பு காஸா சிறுமி- பிடிஐ
Updated On :15 ஜூலை 2024, 1:48 pm

இணையதளச் செய்திப் பிரிவு

இஸ்ரேல் தாக்குதலால் காஸா நகரம் முழுவதுமே சேதமடைந்துள்ள நிலையில், கட்டட இடிபாடுகள் மட்டுமே 40 மில்லியன் டன் அளவில் இருப்பதாகவும் அவற்றை அகற்ற 500 முதல் 600 மில்லியன் டாலர்கள் செலவாகும் எனவும் ஐக்கிய நாடுகள் அவை மதிப்பிட்டுள்ளது.

கப்பற்படையுடன் கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் இடிபாடுகளை அகற்றினால் கூட, இடிந்த குவியல்களை முழுவதும் அகற்ற 15 ஆண்டுகள் ஆகும் எனவும் ஐ.நா. குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேல் தாக்குதலால் அழிக்கப்பட்ட பாலஸ்தீன மாகாணத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான மகத்தான சவாலை ஐக்கிய நாடுகள் அவையின் வளர்ச்சித் திட்ட முடிவுகள் குறிப்பிடுகின்றன.

ஐ.நா. அவையின் சுற்றுச்சூழல் வளர்ச்சித் திட்டம் கடந்த மாதம் வெளியிடப்பட்ட மதிப்பீட்டின் படி, காஸா நகரில் 1,37,297 கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், நகரின் மொத்த கட்டடங்களில் இது பாதிக்கும் மேற்பட்ட அளவாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கால் பகுதி முழுவதுமாக சேதமடைந்துள்ளன.

250 முதல் 500 ஹெக்டர் பரப்பளவிலான பரந்த நிலத்தில், கட்டட இடிபாடுகளைக் கொட்டுவதை விட, எவ்வளவு மறுசுழற்சி செய்ய முடியும் என்பதைக் கண்டறிந்து, இடிபாடுகளைக் கொட்டுவது அவசியம் என மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அவையின் மேம்பாட்டுத் திட்ட கணக்கீட்டின்படி, காஸா நகரின் மறு உருவாக்கத்துக்கு 40 பில்லியன் (டாலர்) செலவாகும் என்றும் இதற்கு 16 ஆண்டுகள் ஆகும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

காஸாவின் மறுவாழ்வுக்கான முன்கூட்டியே திட்டமிடலுக்கான நிதி திரட்டும் முயற்சியின் ஒரு பகுதியாக ஐ.நா.வின் இந்த அந்த மதிப்பீடு, வெளியிடப்பட்டது

மேலும் இந்த மாகாணத்தில் சுகாதாரம், கல்வி மற்றும் வளம் ஆகியவையும் பாதிக்கப்பட்டுள்ளதால், 44 ஆண்டுகால வளர்ச்சியை அழித்து 1980களுக்கு இட்டுச் சென்றுள்ளது.

இது தொடர்பாக பேசிய ஐ.நா. அவையின் அதிகாரி, காஸாவின் நிலப்பரப்பு மொத்தமாக மாறியுள்ளது. இதுவரை 907 கிலோ அளவிலான வெடிகுண்டுகள் நிலப்பரப்பின் மீது வீசப்பட்டுள்ளதால், நிலப்பரப்பின் தன்மை முழுவதும் மாறியுள்ளது.

இதனால், நிலப்பரப்பில் உள்ள பழுப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளதால், குடிநீர் விநியோகம் பல இடங்களில் பல இடங்களில் சிரமமாகியுள்ளது.

கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், சாலைகள், பாதாள சாக்கடை போன்ற அடிப்படை கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.

இதன் விளைவாக, காஸாவின் மறுகட்டமைப்புக்காக ஐ.நா. மற்றும் பாலஸ்தீன அதிகாரிகளால் கடந்த ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டை விட இரு மடங்கு தேவை தற்போது எழுந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அவையின் இராக்கைச் சேர்ந்த சுரங்க சேவை அதிகாரி பேஹ்ர் லோதம்மர் கூறியதாவது, சராசரியாக 10% வெடிகுண்டுகள் வெடிக்காத நிலையில் நிலத்தில் இருக்கின்றன. அவை அவ்வபோது வெடிக்கவும் செய்கின்றன. அவற்றை கண்டறிந்து செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காஸாவில் இடிந்த கட்டடங்களில் 65% குடியிருப்புப் பகுதிகள். இந்த இடிபாடுகளை அகற்றுவதில் மிகுந்த கவனம் மற்றும் பொறுமை தேவை. ஏனெனில், இடிபாடுகளில் வெடிக்காத நிலையில் அதிக எண்ணிக்கையிலான குண்டுகள், ஏவுகணைகள் மற்றும் வெடிக்கும் வகையிலான ஆயுதங்கள் இருக்கலாம்.

தற்போது வாரத்துக்கு 10 முறையாவது இடிபாடுகளில் உள்ள குண்டுகள் ஆங்காங்கே வெடிக்கின்றன. இவை வெடிகுண்டு நிபுணர் குழுக்கள் மூலம் கண்டறிந்து அகற்றப்பட்டு வருகின்றன எனக் குறிப்பிட்டார்.

பாலஸ்தீன ஆதரவு பெற்ற காஸா - இஸ்ரேல் ராணுவத்துக்கு இடையே கடந்த அக்டோபர் முதல் போர் நீடித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.