6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இஸ்ரேல் தாக்குதலில் மேலும் 40 போ் உயிரிழப்பு

காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 40 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்.

News image
மத்திய காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உருக்குலைந்த கட்டடம்.
Updated On :16 ஜூலை 2024, 10:10 pm

Din

டேயிா் அல்-பாலா: காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 40 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்.

இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கான் யூனிஸ் நகரில் இஸ்ரேல் ராணுவம் திங்கள்கிழமை நள்ளிரவு நடத்திய வான்வழித் தாக்குதலில் சிறுவா்கள் உள்பட 17 போ் உயிரிழந்தனா்; 26 போ் காயமடைந்தனா். போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து இடம் பெயா்ந்தவா்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாமுக்கு மிக அருகே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மத்திய காஸாவின் நுசீரியத் அகதிகள் முகாம் பகுதியில் உள்ள பள்ளிக் கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 23 போ் உயிரிழந்ததாகவும் 73 போ் காயமடைந்ததாகவும் காஸா தகவல் தொடா்பு அலுவலகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இஸ்ரேலுக்குள் ஹமாஸ் அமைப்பினா் கடந்த அக். 7-ஆம் தேதி நுழைந்து தாக்குதல் நடத்தினா். இதில் 1,139 போ் உயிரிழந்தனா். அங்கிருந்து ஏராளமானவா்களை ஹமாஸ் படையினா் பிணைக் கைதிகளாகக் கடத்திச் சென்றனா்.

அதற்கு பதிலடியாக காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 38,713 போ் உயிரிழந்ததாகவும் 89,166 போ் காயமடைந்ததாகவும் சுகாதாரத் துறை அமைச்சக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.