மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

டிரம்புக்கு ரூ. 376 கோடி தேர்தல் நன்கொடை அளிக்கும் எலான் மஸ்க்!

டிரம்ப் மீதான துப்பாக்கிச் சூட்டுக்கு பிறகு எலான் மஸ்க் ஆதரவளித்திருந்தார்.

News image
டிரம்ப், மஸ்க்
Updated On :16 ஜூலை 2024, 8:16 am

DIN

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு தேர்தல் நிதியாக ரூ. 376 கோடியை டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் வழங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருகின்ற நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் நடுநிலை வகிக்கவுள்ளதாக முதலில் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், மறைமுகமாக டிரம்புக்கு ஆதரவாக அமெரிக்க தொழிலதிபர்களுடன் மஸ்க் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், கடந்த சனிக்கிழமை டிரம்பு மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு பிறகு வெளிப்படையாக மஸ்க் ஆதரவை அறிவித்தார்.

இந்த நிலையில், டிரம்புக்கு தேர்தல் வியூகம் வகுக்கும் சூப்பர் பிஏசி நிறுவனத்திடம் 4.5 கோடி டாலர் (இந்திய மதிப்பின்படி ரூ.376 கோடி) நிதி வழங்க உறுதி அளித்துள்ளதாக ’தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ திங்கள்கிழமை தெரிவித்திருந்தது.

மேலும், மற்றொரு அமெரிக்க நாளிதழ் வெளியிட்ட தகவலின்படி, தொழிலதிபர்கள் ஷான் மாகுவேர், ஜான் ஹெரிங் ஆகியோர் தலா 5 லட்சம் டாலர்கள், கேமரூன் மற்றும் டைலர் விங்க்லெவோஸ் தலா 2.5 லட்சம் டாலர்கள் நன்கொடை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, டிரம்புக்காக யாரிடமிருந்து எவ்வளவு நிதி பெறப்பட்டுள்ளது என்ற விவரத்தை சூப்பர் பிஏசி நிறுவனம் செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ளது.

வரும் நவம்பா் 5-ஆம் தேதி அமெரிக்க அதிபா் தோ்தல் நடைபெற உள்ளது. இந்தத் தோ்தலில் ஜனநாயக கட்சி சாா்பில் அந்நாட்டின் தற்போதைய அதிபா் ஜோ பைடன், குடியரசு கட்சி சாா்பில் டொனால்ட் டிரம்ப் ஆகியோா் வேட்பாளா்களாகப் போட்டியிடுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், அவர் காது பகுதியில் லேசான காயம் ஏற்பட்டது.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பத்துக்கு பிறகு டிரம்புக்கான ஆதரவு அதிகரித்துள்ளதாக அமெரிக்க அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.