உறவினை மீட்டமைக்க சரியான தருணம்: சீன அரசு நாளிதழின் தலையங்கம் சொல்வது என்ன?

இந்தியா-சீனா உறவுகளை மீட்டமைக்க சரியான தருணம்: சீனா டெய்லி தலையங்கம்
சீன அதிபருடன் மோடி (கோப்புப் படம்)
சீன அதிபருடன் மோடி (கோப்புப் படம்)

நாட்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையவுள்ளதையடுத்து சீனாவின் முன்னணி ஆங்கில நாளிதழ் ’சீனா டெய்லி’ வியாழக்கிழமை வெளியிட்ட தலையங்கத்தில், இரு அண்டை நாடுகள் தங்கள் உறவை மீட்டமைக்க சரியான தருணம் இதுவென குறிப்பிட்டுள்ளது.

நன்னம்பிக்கை அடிப்படையிலான பேச்சு வார்த்தையின் மூல இரு நாடுகள் தங்களிடையே உள்ள விவகாரங்களை தீர்த்துக்கொள்ளும் வல்லமையை செயல்படுத்த வேண்டும் எனக் குறிப்பிடும் அந்த நாளிதழ், இரு நாடுகளுக்கும் ஒரே போல விருப்பங்களும் வேறுபாடுகளும் இருப்பதாகவும் குறிப்பிடுகிறது.

இரு வளர்கிற பொருளாதார நாடுகள் கைக்கோர்க்கும்போது அது இரு நாடுகளுக்குமே ஆதாயமாக அமையும். எல்லை பிரச்னை உருவான பிறகு 2020 முதல் சீன நிறுவனங்களின் முதலீடுகள் மற்றும் இறக்குமதியை இந்தியா கட்டுப்படுத்திய போதும் இரு நாடுகளுக்கிடையேயான வணிகம் நிலையானதாகவும் குறிப்பிடத்தக்க அளவில் நீடித்ததாகவும் அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

நடந்து முடிந்துள்ள தேர்தல் நாட்டின் அரசுக்கு சீனாவுடனான கொள்கைகளை மீட்டமைக்கும் வாய்ப்பை அளித்துள்ளதாகவும் சீனாவின் வளர்ச்சி என்பது இந்தியாவிற்கு ஆபத்துகள், நிச்சயமின்மைகள் அல்லது எச்சரிக்கையை கொடுக்காது. மாறாக வளர்ச்சி மற்றும் வாய்ப்புகளை தரும் எனவும் நாளிதழ் குறிப்பிடுகிறது.

இரு நாடுகளின் கூட்டான மக்கள்தொகை உலகளவில் உள்ள மக்கள் தொகையில் 37.5 சதவிகிதம் எனவும் இரு நாடுகளும் ஒன்றின் வளர்ச்சிக்கு மற்றொரு நாடு உதவும்போது நீண்டகால நோக்கிலும் ராஜ்ய தந்திரங்களுடன் இணைந்து செயல்பட கூட்டு முயற்சி எடுக்க வேண்டும் என அந்த நாளிதழ் அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com