சீனாவில் 80 வயது முதியவரை காதலித்து கரம்பிடித்த 23 வயது இளம்பெண்!


சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் 80 வயது ஆணும் 23 வயது இளம்பெண்ணும் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.
சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் லீ என்கிற 80 வயதான முதியோரும் உள்ளார். இங்கு இளம்பெண் சியாஃபங்(23) பணிபுரிந்து வந்துள்ளார். இருவரும் முதலில் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.
இது ஒருகட்டத்தில் அவர்களுக்கு இடையே காதலாக மலர்ந்துள்ளது.
இந்த காதலுக்கு இளம்பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் லியை திருமணம் செய்து கொள்வதற்காக சியாஃபங் தனது பெற்றோருடனான அனைத்து உறவுகளையும் முறித்துக் கொண்டார்.
பின்னர் இருவரும் எளிய முறையில் திருமணம் செய்துகொண்டனர்.
இந்த திருமணத்தில் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்று சீன இணையதளம் ஒன்று தெரிவித்துள்ளது. தற்போது இந்த ஜோடியின் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...