ரஷியாவின் எண்ணெய் கிடங்கை தகர்த்த உக்ரைன் டிரோன்கள்!
உக்ரைன் டிரோன் தாக்குதலில் ரஷிய எண்ணெய் கிடங்கில் பெரும் தீ!


ரஷியாவின் ரோஸ்டோவ் மாகாணத்தில் உள்ள அசோவ் எண்ணெய் கிடங்கை உக்ரைன் டிரோன்கள் தாக்கியதில் கிடங்கில் தீ உருவானதாக ரஷிய மீட்புப் படையினர் புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.
ரோஸ்டோவ் மாகாணத்தின் ஆளுநர் வாசிலி கோலுபேவ், கிடங்கு முழுக்கவும் எண்ணெய் பொருள்கள் நிரம்பியிருந்ததாகவும் டிரோன் தாக்குதலால் கிடங்கு வெடித்துள்ளதாகவும் தெரிவித்தார். முதல்கட்ட தகவலறிக்கையில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.
4000 சதுர மீட்டர்கள் கொள்ளளவு கொண்ட கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் 200 வீரர்கள் மற்றும் 49 உபகரண தொகுதிகள் ஈடுபட்டுள்ளதாக ரஷிய அவசரகால மீட்புப் படை தெரிவித்துள்ளது.
உக்ரைனின் நான்கு போர் டிரோன்கள் இந்தத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...