தைவான் மீது படைகளை ஏவ ஆயத்தமாகிறது சீனா!
தைவான் சீன எல்லைக்குட்பட்ட பகுதி என பகிரங்கமாக அறிவித்துள்ள சீனா, ராணுவத்தின் மூலம் தைவானை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தயங்கமாட்டோம் என தெரிவித்துள்ளது.
சுய ஆட்சி நடைபெறும் ஜனநாயக நாடான தைவானை ஆக்கிரமிக்கத் தயாராகி வருகிறது சீனா. முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை தைவானை சுதந்திர தேசமாக அங்கீகரிப்பது குறித்த நடவடிக்கைகளில் ஈடுபட்டால் மரண தண்டனை விதிக்கப்படுமென சீனா தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சீனா தனது ராணுவ தளவாடங்களை தைவானில் நிலைநிறுத்தியிருப்பதாக தைவான் குற்றஞ்சாட்டியுள்ளது.
தைவானின் புதிய அதிபராக லாய் சிங்-தே கடந்த மாதம் பதவியேற்றுள்ள நிலையில், சீனாவின் அச்சுறுத்தல்களுக்கு தைவான் அடிபணியப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தைவான் வான் எல்லைப்பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 40க்கும் மேற்பட்ட சீன போர் விமானங்கள் வலம் வருவதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தைவான் கடல் எல்லையில் 5க்கும் மேற்பட்ட சீன கடற்படைக் கப்பல்கள் ரோந்து வருவதற்கும் தைவான் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, சீனாவை ஒட்டி அமைந்துள்ள தைவான் தீவில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.