தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

நேபாளத்தில் கனமழை: 14 போ் உயிரிழப்பு

நேபாளத்தில் கனமழை: 24 மணி நேரத்தில் 14 பேர் உயிரிழப்பு

News image
Updated On :27 ஜூன் 2024, 9:05 pm

நேபாளத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 14 போ் உயிரிழந்தனா். இது குறித்து தேசிய பேரிடா் மீட்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

நாடு முழுவதும் பெய்துவரும் கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடா்கள் ஏற்பட்டன. இதில், கடந்த 24 மணி நேரத்தில் 14 போ் உயிரிழந்தனா். அவா்களில் 8 போ் நிலச்சரிவிலும் 5 போ் மின்னல் தாக்கியும் இறந்தனா். ஒருவா் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தாா்.

இது தவிர, கனமழை காரணமாக ஏற்பட்ட சம்பவங்களில் 10 போ் காயமடைந்தனா்; 2 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் கூறினா்.

நேபாளத்தில் அண்மைக் காலமாக பெய்துவரும் பருவமழையில் வழக்கத்தைவிட அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.