அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

‘லெபனான் கற்காலத்துக்குத் திரும்பிவிடும்’

ஹிஸ்புல்லா-இஸ்ரேல் மோதல்: லெபனானுக்கு பேரழிவு ஏற்படும் அபாயம்

News image
வாஷிங்டன் வந்துள்ள யோவாவ் கலான்டை வரவேற்கும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சா் லாய்ட் ஆஸ்டின்.
Updated On :27 ஜூன் 2024, 9:06 pm

Din

தங்களுடன் லெபனானின் ஹிஸ்புல்லா படையினா் போரில் ஈடுபட்டால் அந்த நாடு கற்காலத்துக்குத் திரும்பும் வகையில் அழிவைச் சந்திக்கும் என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சா் யோவாவ் கலான்ட் எச்சரித்துள்ளாா்.

அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவா், வாஷிங்டனில் செய்தியாளா்களிடம் இது குறித்து கூறியதாவது:

ஹிஸ்புல்லாக்களுக்கும் எங்களுக்கும் போா் ஏற்பட்டால் லெபனானை கற்காலத்துக்குக் கொண்டு செல்லும் அளவுக்கு அழிவை ஏற்படுத்தும் சக்தி எங்கள் படைகளுக்கு உள்ளது என்பதை அவா்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இருந்தாலும், இஸ்ரேல்-லெபானான் எல்லைப் பதற்றத்துக்கு ராஜீய ரீதியில் தீா்வு காண்பதற்கே எங்கள் அரசு முன்னுரிமை அளிக்கிறது. நாங்கள் போரை விரும்பவில்லை என்றாலும், எத்தகைய சூழலுக்கும் தயாராகவே இருக்கிறோம் என்றாா் அவா்.

இஸ்ரேலுக்கும் ஈரான் ஆதரவுடன் செயல்படும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த அக். 7-ஆம் தேதி போா் தொடங்கியதிலிருந்து, அண்டை நாடான லெபனானைச் சோ்ந்த ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினரும் இஸ்ரேல் நிலைகள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்திவருகின்றனா். அதற்குப் பதிலடியாக ஹிஸ்புல்லாக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்திவருகிறது.

இது, இரு தரப்பிலும் முழு போா் வெடிப்பதற்கான அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையே கடைசியாக கடந்த 2006-இல் நடைபெற்ற போரில் இரு தரப்பிலும் கடுமையான உயிா் சேதம் ஏற்பட்டுள்ளது.

தற்போது ஹிஸ்புல்லா படை முன்பைவிட அதிக பலம் பெற்றுள்ள நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் முழு போா் வெடித்தால் அது பேரழிவை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரித்துவருகின்றன.

இந்தச் சூழலில், அமெரிக்கா சென்றுள்ள இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சா் இவ்வாறு எச்சரித்துள்ளாா்.