திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ரஷியாவில் பயணிகள் ரயில் விபத்து: 9 பெட்டிகள் தடம் புரண்டது!

விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

News image
ரஷியாவில் பயணிகள் ரயில் விபத்து(படம்: எக்ஸ்)
Updated On :27 ஜூன் 2024, 3:30 am

DIN

ரஷியாவில் பயணிகள் ரயில் தடம் புரண்டதில் 70 பேர் காயமடைந்ததுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷிய ஊடகத்தில் வெளியான செய்திகளில் 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோமி குடியரசின் வோர்குடாவில் இருந்து நோவோரோசிஸ்க் வரை 5,000 கி.மீ. தொலைவுக்கு இயக்கப்பட்ட பயணிகள் ரயில், இண்டா நகரம் அருகே உள்ளூர் நேரப்படி புதன்கிழமை மாலை 6.12 மணியளவில் தடம் புரண்டுள்ளது.

மொத்தம் 14 பெட்டிகளில் 511 பயணிகள் பயணித்த நிலையில், 9 பெட்டி தடம் புரண்டுள்ளது. இதில், 70 பயணிகள் காயமடைந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனமழை காரணமாக ரயில் விபத்து ஏற்பட்டதாக ரஷிய ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ள நிலையில், 2 மீட்பு ரயில்களுடன் மீட்புப் படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.