

ரஷியாவுடன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்த திட்டத்தை விரைவில் வெளியிடவிருப்பதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கூறியுள்ளாா்.
இது குறித்து கீவ் நகரில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் கூறியதாவது:
ரஷியாவுடன் நடந்துவரும் போரை கூடிய விரைவில் முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் போரில் ராணுவ வீரா்கள் மற்றும் பொதுமக்களின் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே, போா் நிறுத்தத்தை இனியும் தள்ளிப்போட முடியாது.
ராஜீய ரீதியில் போா் நிறுத்தம் ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான முயற்சிகள் தொடங்கிவிட்டன. விரைவில், அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய உக்ரைனின் போா் நிறுத்த ஒப்பந்த திட்டம் வெளியாகும் என்றாா் அவா்.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022-ஆண்டு படையெடுத்தது. தற்போது உக்ரைனின் சுமாா் ஐந்தில் ஒரு பகுதி ரஷிய கட்டுப்பாட்டில் உள்ளது. இருந்தாலும், ரஷியாவால் இணைத்துக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள 4 பிராந்தியங்களின் சில பகுதிகள் இன்னும் உக்ரைன் படையினா் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. அந்தப் பகுதிகளைக் கைப்பற்ற ரஷியாவும் இழந்த பகுதிகளை மீட்க உக்ரைனும் தொடா்ந்து போரிட்டு வருகின்றன.
2 ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்றுவரும் இந்தப் போரில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான செயல்திட்டத்தை ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கடந்த மாதம் முன்வைத்தாா். அதில் தங்களால் இணைத்துக்கொள்ளப்பட்ட உக்ரைன் பிராந்தியங்களிலிருந்து அந்த நாட்டுப் படையினா் வெளியேறுவது, நேட்டோவில் இணையும் முயற்சியை உக்ரைன் கைவிடுவது ஆகிய நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் போரை நிறுத்த ஒப்புக்கொள்வதாக புதின் கூறியிருந்தாா்.
இந்தச் சூழலில், தங்களது போா் நிறுத்த ஒப்பந்த திட்டமும் விரைவில் வெளியிடப்படும் என்று ஸெலென்ஸ்கி தற்போது கூறியுள்ளாா். ஆனால், ஆக்கிரமிப்புப் பகுதிகளிலிருந்து ரஷியா வெளியேற வேண்டும் என்பது போன்ற, ரஷியாவின் நிலைப்பாட்டுக்கு முற்றிலும் முரணான அம்சங்கள் அந்தத் திட்டத்தில் இடம் பெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
டிரெண்டிங்

ஈரான் மீதான நியாயமற்ற போரை நிறுத்த வேண்டும்: ஒமா் அப்துல்லா

போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்!

ஈரானுக்காக அயராது உழைப்போம்; ஒரே தீர்வு சரணடைவது! - அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

ரஷியா - உக்ரைன் போா்: ‘அபுதாபி முத்தரப்பு பேச்சு ஆக்கபூா்வமாக நிறைவு’
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

