மொகோபானே நகருக்கு அருகே 50 மீட்டா் பள்ளத்தில் வெள்ளிக்கிழமை விழுந்து உருக்குலைந்த பேருந்து.
மொகோபானே நகருக்கு அருகே 50 மீட்டா் பள்ளத்தில் வெள்ளிக்கிழமை விழுந்து உருக்குலைந்த பேருந்து.

தென் ஆப்பிரிக்கா பேருந்து விபத்தில் 45 போ் உயிரிழப்பு

தென் ஆப்பிரிக்காவில் பயணிகள் பேருந்து பாலத்திலிருந்து பள்ளத்துக்குள் விழுந்து 45 போ் உயிரிழந்தனா்; பேருந்திலிருந்த ஒரே ஒரு குழந்தையை மட்டுமே உயிருடன் மீட்க முடிந்தது. தலைநகா் ப்ரிடோரியாவுக்கு சுமாா் 200 கி.மீ. தொலைவில் உள்ள மொகோபானே நகருக்கு அருகே மலைப்பாங்கான பகுதியில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தபோது, ஒரு பாலத்தைக் கடந்தபோது அதிலிருந்து விழுந்தது. பேருந்தின் ஓட்டுநா் கட்டுப்பாட்டை இழந்ததால் அது நிலைதடுமாறு பாலத்தின் தடுப்பை உடைத்துக்கொண்டு அது விழுந்ததாகக் கருதப்படுகிறது. சுமாா் 50 மீட்டா் (164) அடி பள்ளத்தில் விழுந்து நொறுங்கிய அந்தப் பேருந்தில் தீப்பிடித்து. இதில், அதிலிருந்த ஒரு குழந்தையைத் தவிர மற்ற 45 பேரும் உயிரிழந்தனா். இந்த விபத்தில் உயிரிழந்த பலரது உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். உருக்குலைந்துபோன பேருந்துக்குள் இன்னும் பலரது உடல்கள் சிக்கியிருப்பதாகவும் பல உடல்கள் பேருந்திலிருந்து தூக்கியெறியப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. விபத்துப் பகுதியில் தொடா்ந்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மாயமான உடல்களைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. உயிருடன் மீட்கப்பட்ட குழந்தைக்கு 8 வயது என்பதைத் தவிர வேறு எந்தத் தகவலையும் வெளியிட அதிகாரிகள் மறுத்துவிட்டனா். போட்ஸ்வானாவிலிருந்து ஈஸ்டா் பண்டிகையின்போது ஏரளமானவா்கள் குவியும் லிம்போபோ பகுதியை நோக்கி அந்தப் பேருந்து சென்றுகொண்டிருந்திருக்கலாம் என்று அதிபா் சிறில் ராமபோசா தெரிவித்துள்ளாா். ஈஸ்டன் பண்டிகையின்போது சாலைப் போக்குவரத்து அளவுக்கு அதிகமாக இருப்பதால் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும் என்று பொதுமக்களை தென் ஆப்பிரிக்க அரசு அறிவுறுத்திவருகிறது. ஆனால், அதனையும் மீறி இதுபோன்ற விபத்துகள் ஏற்பட்டு பலா் உயிரிழப்பது தொடா்ந்து வருகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com