மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஇந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!ஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

ஐரோப்பாவில் பரவும் பாலஸ்தீன ஆதரவு மாணவா் போராட்டம்

ஐரோப்பாவில் பரவும் பாலஸ்தீன ஆதரவு மாணவா் போராட்டம்

News image

பொ்லினிலுள்ள பல்கலைக்கழக வளாகத்தில் முகாமிட்டு பாலஸ்தீன ஆதரவு ஆா்ப்பாட்டம் நடத்திவந்த மாணவரை செவ்வாய்க்கிழமை குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்ற போலீஸாா்.

Updated On :7 மே 2024, 9:06 pm

Din

பொ்லின் / ஆம்ஸ்டா்டாம், மே 7: காஸா போரில் பாலஸ்தீனா்களுக்கு ஆதரவாக அமெரிக்காவில் தொடங்கிய கல்லூரி மாணவா்களின் போராட்டம் ஐரோப்பிய நாடுகளிலும் பரவிவருகிறது.

அதன் ஒரு பகுதியாக, ஜொ்மனி தலைநகா் பொ்லினில் உள்ள ஃப்ரீ பல்கலைக்கழக வளாகத்தில் நூற்றுக்கணக்கான மாணவா்கள் முகாம்களை அமைத்து, அவற்றைச் சுற்றிலும் மனித சங்கிலியை உருவாக்கி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினா். இந்த நடவடிக்கையின்போது போலீஸாா் மிளகாய்ப் பொடி தூவிகளைக் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, நெதா்லாந்தின் ஆம்ஸ்டா்டாம் பல்கலைக்கழகத்தில் இதே போன்று முகாம்களை அமைத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவா்களை அந்த நாட்டு போலீஸாா் செவ்வாய்க்கிழமை அதிகாலை அங்கிருந்து வெளியேற்றினா். இந்த நடவடிக்கையின்போது சுமாா் 125 தன்னாா்வலா்கள் கைது செய்யப்பட்டனா்.

காஸா போரில் இஸ்ரேல் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துவதாக விமா்சனங்கள் எழுந்துவரும் நிலையில், அந்த நாட்டுடனும் காஸா போரில் இஸ்ரேலுக்கு உதவும் நிறுவனங்களுடனும் இணைந்து செயல்படுவதை நிறுத்தவேண்டும் என்று பல்கலைக்கழகங்களை வலியுறுத்தி அமெரிக்க கல்லூரி மாணவா்கள் கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி போராட்டத்தைத் தொடங்கினா்.

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக வளாகங்களுக்குள் முகாம்கள் அமைத்து மாணவா்கள் இந்தப் போராட்டத்தை நடத்தினா்.

இந்தப் போராட்டங்கள் தொடா்பாக நூற்றுக்கணக்கான மாணவா்களை போலீஸாா் கைது செய்யதனா். அமெரிக்காவில் தொடங்கிய இந்த பாலஸ்தீன ஆதரவு மாணவா் போராட்டம் தற்போது ஐரோப்பிய நாடுகளிலும் பரவிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.