‘பெண்களை போல வாகனம் ஓட்டுங்கள்’ : கவனம் ஈர்க்கும் விளம்பரம்!

பிரான்ஸில் சாலை விபத்துகள்: ஆண்கள் மீது குற்றச்சாட்டு
மாதிரி படம்
மாதிரி படம்Pixabay
Published on
Updated on
1 min read

பிரான்ஸை சேர்ந்த சாலை பாதுகாப்பு அமைப்பு திங்கள்கிழமை ‘பெண்களை போல வாகனம் ஓட்டுங்கள்’ என்கிற விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது.

கார்கள், இருசக்கர வாகனங்கள் இயக்குவதில் பெண்களை விட ஆண்களே சிறந்தவர்கள் என்கிற பொது மனப்பான்மை நிலவுகிற நிலையில், அதற்கு நேர்மாறாக விழிப்புணர்வு வாசகத்தை விக்டிம்ஸ் அண்ட் சிட்டிசன்ஸ் அமைப்பு மெட்ரோ நிலையங்களிலும் இணையத்தளத்திலும் விளம்பரப்படுத்தி வருகிறது.

இந்த அமைப்பு சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கி வருகிறது.

இது குறித்து அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

அரசு தரவுகளின்படி, பிரான்ஸில் 84 சதவிகித மோசமான சாலை விபத்துகள் ஆண்களால் ஏற்பட்டுள்ளது.

ஆண்களின் மனநிலையில் மாற்றம் கொண்டுவருவதன் மூலம் அவர்களின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படுத்தலாம்.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி விபத்துக்குள்ளானவர்களில் 93 சதவிகிதம் பேர் ஆண்களாக உள்ளனர்.

பெண்களைப் போல வாகனம் ஓட்டுவது என்பது உயிருடன் இருப்பதை வலியுறுத்துகிறது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் பிரான்ஸில் 3,200 பேர் சாலை விபத்தில் இறந்துள்ளதாகவும் இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com