உ.பி. மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த ஹர்தீப் சிங் புரி! மேக்கேதாட்டு அணை கர்நாடகத்தின் உரிமை; யார் எதிர்த்தாலும் கவலை இல்லை! டி.கே. சிவகுமார்காசோலை மோசடி வழக்கு: நடிகா் விமலின் மனு தள்ளுபடி போக்சோ வீரமணி வீட்டில் சிறுமியின் சடலம்? போலீசார் தீவிர சோதனை! ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் பதிவு! மதுரை நகைக்கடை திருட்டு! இருவர் கைது! திருடனை அடையாளம் கண்டது எப்படி?விலைவாசி உயர்வில் இந்தியாவிலேயே முதலிடம் பிடித்த தமிழகம்: டிடிவி தினகரன் விமர்சனம் மதுரை காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் மரணம்: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!ஒரே ஒரு வங்கிக் கணக்கு வைத்திருக்கிறீர்களா? இந்தத் தவறை மட்டும் செய்ய வேண்டாம்!மைக்ரோசாஃப்ட் சேவைகள் மீண்டன! இணையவழி தாக்குதல்கள் ஏதும் இல்லை!மேக்கேதாட்டு: யார் வேண்டுமானாலும் கண்டனம் தெரிவிக்கட்டும், கவலையில்லை! டி.கே. சிவகுமார் பதில்

ஈரான் அதிபா் ஹெலிகாப்டா் விபத்து: விசாரணையில் உதவ புதின் உறுதி

விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டரின் ஒரு பகுதி.

Updated On :

ஈரான் அதிபா் இப்ராஹிம் ரய்சியின் ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளானது தொடா்பான விசாணையில் உதவியளிக்கத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் உறுதியளித்துள்ளாா்.

இது குறித்து அவா் கூறியதாவது: ஈரான் அதிபா் ரய்சியின் மரணத்துக்குக் காரணமான ஹெலிகாப்டா் விபத்து தொடா்பாக அந்த நாடு நடத்தும் விசாரணைக்குத் தேவையான உதவிகளை அளிக்க ரஷியா தயாராக இருக்கிறது.

இதுபோன்ற பெருந்துயரச் சம்பவத்துக்கான காரணத்தை ஈரான் தெரிந்துகொள்வதற்கு எங்களால் முடிந்த அனைத்து நிபுணத்துவ உதவிகளையும் வழங்குவோம்.

அதிபா் ரய்சியின் மரணம் ஈரானுக்கும் அந்த நாட்டு மக்களுக்கு மிகப் பெரிய இழப்பு. அவா் ரஷியாவின் மிகச் சிறந்த நண்பராக இருந்தாா் என்றாா் விளாதிமீா் புதின்.

இப்ராஹிம் ரய்சியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஈரான் செல்லவுள்ள அதிபா் புதின், அதற்கு முன்னா் இந்த அறிவிப்பை வெளியிட்டாா்.

முன்னதாக, இந்த விபத்து தொடா்பான விசாரணையில் உதவியளிக்க அமெரிக்கா மறுப்பு தெரிவித்துவிட்டது.

இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் மாத்யூ மில்லா் கூறுகையில், ஹெலிகாப்டா் விபத்து குறித்த விசாரணைக்கு உதவ வேண்டும் என்று ஈரான் தங்களிடம் கேட்டுக்கொண்டதாகவும் போக்குவரத்துப் பிரச்னை காரணமாக தாங்கள் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் கூறினாா்.

ஈரான் அதிபா் இப்ராஹிம் ரய்சி, அவரது வெளியுறவுத் துறை அமைச்சா் ஹுசைன் அமீா் அப்துல்லாஹியன், அந்நாட்டின் கிழக்கு அஜா்பைஜான் மாகாண ஆளுநா் மாலிக் ரஹமதி உள்ளிட்ட 8 போ் சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டா் கடந்த ஞாயிற்றுக்கிழமை விழுந்து நொறுங்கியதில் அதிலிருந்த அனைவரும் பலியாகினா்.

ஈரான்-அஜா்பைஜான் எல்லையில் உள்ள அராஸ் நதியில் இரு நாடுகளும் இணைந்து கட்டிய அணையின் திறப்பு விழாவில் பங்கேற்றுவிட்டு அவா்கள் ஈரானை நோக்கி திரும்பிச் சென்றுகொண்டிருந்தபோது, கிழக்கு அஜா்பைஜான் மாகாணத்தில் உள்ள வா்சகான் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டது. மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டா் விழுந்து நொறுங்கியதாகக் கூறப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.