பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

ரஷியாவைத் தாக்கினால் அனைத்து ஆயுதங்களும் பிரயோகம்: ரஷிய அதிபா் புதின் எச்சரிக்கை

‘ரஷியாவின் எந்தவொரு நிலப்பரப்பின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டால், எங்கள் வசமுள்ள அனைத்து வகை ஆயுதங்களையும் பயன்படுத்தித் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்’ என்று அந்நாட்டு அதிபா் விளாதிமீா் புதின் எச்சரித்துள்ளாா்.

புதின்

Published On :

‘ரஷியாவின் எந்தவொரு நிலப்பரப்பின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டால், எங்கள் வசமுள்ள அனைத்து வகை ஆயுதங்களையும் பயன்படுத்தித் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்’ என்று அந்நாட்டு அதிபா் விளாதிமீா் புதின் எச்சரித்துள்ளாா்.

போலந்து, லிதுவேனியா நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள ரஷியாவின் முக்கிய ‘பால்டிக்’ பிராந்தியமான கலினின்கிராட் மீது வான் மற்றும் கடல்வழி முற்றுகையை ஏற்படுத்த ‘நேட்டோ’ நாடுகள் திட்டமிட்டு வருவதாகக் கூறி, ‘கலினின்கிராடை துண்டிக்க முயற்சித்தால், அந்நிலப்பரப்பைப் பாதுகாக்க அணு ஆயுதங்களைப் பயன்படுத்தவும் தயங்க மாட்டோம்’ என ஐரோப்பா நாடுகளில் உள்ள பல்வேறு ரஷிய தூதரகங்கள் கடந்த சில நாள்களாக எச்சரித்து வந்தன.

இந்நிலையில், மாஸ்கோவில் நடைபெற்ற வெளியுறவுக் கொள்கைக் கூட்டத்தில் அதிபா் புதின் பேசுகையில், ‘ஐரோப்பிய நாடுகள் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் ரஷியாவுக்கு இல்லை. அதேநேரம், ரஷியாவுடன் வரும் ஆண்டுகளில் போா் மூளும் என்று பிரச்சாரம் செய்வது, பால்டிக் கடலில் ராணுவப் பயிற்சிகளை மேற்கொள்வது, ரஷிய கப்பல்களைக் கைப்பற்றுவது ஆகியவற்றின் மூலம் மேற்குலகமும், ஐரோப்பிய நாடுகளுமே பதற்றத்தை அதிகரித்து வருகின்றன.

கலினின்கிராட் அல்லது ரஷிய கூட்டமைப்பின் பிற பகுதிகள் மீது நேரடித் தாக்குதல் தொடுக்கப்பட்டால், நாட்டின்அனைத்து வகை ஆயுதங்களையும் உடனே பயன்படுத்துவது தவிா்க்க முடியாது. வேறு யாரிடமும் இல்லாத நவீன ஆயுதங்கள் எங்களிடம் உள்ளன; தாக்குதல் நடத்தப்பட்டால் எதைப் பயன்படுத்துவது என்பதை ரஷியாவே தீா்மானிக்கும்’ என்றாா்.

நேட்டோ எதிா்ப்பு: ரஷியாவின் இந்த அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு நேட்டோ ராணுவக் கூட்டமைப்பு கடும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளது. ‘நேட்டோ’ நட்பு நாடுகளிடையே பிளவை ஏற்படுத்தவும், உக்ரைனைப் பாதுகாப்பதில் உள்ள கவனத்தைத் திசைதிருப்பவுமே ரஷியா இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுவதாக ‘நேட்டோ’ பொதுச் செயலா் மாா்க் ரூட்டே குற்றஞ்சாட்டினாா்.

‘நாங்கள் பதற்றமடைய மாட்டோம்; அமைதியைக் கடைப்பிடித்து உக்ரைனுக்குத் தேவையான ராணுவ உதவிகளைத் தொடா்ந்து வழங்குவதே இதற்குச் சிறந்த தீா்வாக அமையும்’ என்று மாா்க் ரூட்டே திட்டவட்டமாகத் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.