மெக்ஸிகோவில் பிரசார மேடை சரிந்து 6 பேர் பலி, பலர் காயம்!

மெக்ஸிகோவில் தேர்தல் பிரசார மேடை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
மெக்ஸிகோவில் பிரசார மேடை சரிந்து 6 பேர் பலி, பலர் காயம்!

வடக்கு மெக்ஸிகோ நகரத்தில் பிரசார மேடை சரிந்து விழுந்ததில் 6 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

மெக்ஸிகோவில் ஜூன் 2-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அந்த நாட்டின் வடக்கு மாகாணமான நியூவோ லியோனில் உள்ள மான்டேரியின் புறநகர்ப்பகுதியான சான் பெட்ரோ கார்சா கார்சியாவில் நேற்று பலத்த காற்று வீசியது.

அப்போது குடிமக்கள் இயக்கம் கட்சியின் முற்போக்கு வேட்பாளர் ஜார்ஜ் அல்வாரெஸ் மைனெஸ் பிரசார நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்தது. அந்த நிகழ்வின்போது, பலத்த காற்று வீசியதில் மேடை சரிந்து விழுந்தன. இந்த இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

மெக்ஸிகோவில் பிரசார மேடை சரிந்து 6 பேர் பலி, பலர் காயம்!
வங்கக்கடலில் உருவாகிறது புயல்!

இதுதொடர்பாக வேட்பாளர் ஜார்ஜ் அல்வாரெஸ் மைனெஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள தகவலில்,

பேஸ்பால் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரசார மேடை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com