மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

புதிய பூமி.. நாசா கண்டுபிடித்த 'சூப்பர் பூமி' கிரகம்! அதுவும்..

பூமியைப் போன்று 'சூப்பர் பூமி' என்ற கிரகத்தைக் கண்டுபிடித்திருக்கிறதாம் நாசா.

News image
Updated On :25 மே 2024, 8:18 am

இணையதளச் செய்திப் பிரிவு

விண்வெளி ஆராய்ச்சியில் கோலோச்சிவரும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, பூமியைப் போன்ற சூப்பர் பூமி என பெயரிடப்பட்டிருக்கும் ஒரு புதிய கிரகத்தைக் கண்டுபிடித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.

சூரியக் குடும்பத்துக்கு அருகே, உயிர்கள் வாழ உகந்த வகையில் இந்த கிகம் அமைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஓஐ-715பி என்று இந்த சூப்பர் பூமிக்கு அடையாளப் பெயர் சூட்டபப்ட்டுள்ளது. இது பூமியை விட ஒன்றரை மடங்கு பெரியது என்பதால் சூப்பர் பூமி என அழைக்கப்படுகிறது. இது பூமியிலிருந்து 137 ஒலி ஆண்டுகள் தொலைவில்தான் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட நமக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

அந்த கிரகத்தின் சிவப்பு நட்சத்திரம், நமது பூமியின் சூரியனை விடவும் சற்று குளிரானதாகவும் சின்னதாகவும் இருக்கிறதாம். இந்த சிவப்பு நட்சத்திரத்திலிருந்து சூப்பர் பூமி அமைந்திருக்கும் இடைவெளியினால், இந்த சூப்பர் பூமமியில் தட்பவெப்பநிலையானது மிதமாக இருப்பதாகவும், தண்ணீரும் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு உயிர்கள் வாழ முடியும் என்று தற்போது நம்பப்படுகிறது.

இந்த கிரகத்தில் மேலும் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், இது அடிக்கடி சிவப்பு நட்சத்திரத்துக்கு அருகே செல்கிறது. எனவே, அதனை எளிதாக கண்காணிக்க முடிவதாகவும் கூறப்படுகிறது.

தற்போதைக்கு இது பூமியை விட பெரியதாக, நெப்ட்யூன் மற்றும் யுரேனஸ் கிரகங்களை விட எடை குறைந்த, வாயு, பாறைகள் கலந்த கலவையாக இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.