அமெரிக்காவின் அதிபரைத் தேர்வு செய்யும் கடைசி போர்க்கள மாகாணத்திலும் டிரம்ப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 6 ஆம் தேதியில் அதிகாலையில் தொடங்கி, இன்றுவரையில் (நவ. 10) எண்ணப்பட்டு வந்தது. மொத்தமுள்ள 538 தேர்வாளர் வாக்குகளில் 270 வாக்குகளை பெறும் வேட்பாளரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.
பென்சில்வேனியா, மிஷிகன், விஸ்கான்சின், ஜார்ஜியா, வடக்கு கரோலினா, நவாடா, அரிஸோனா போன்ற போர்க்கள மாகாணங்கள்தாம் உண்மையில் அமெரிக்க அதிபரை முடிவு செய்பவையாக உள்ளன. இருப்பினும், பெரும்பான்மை பெறுவதற்கான 270 என்ற வாக்குகளைவிட கூடுதலான வாக்குகளைப் பெற்று, டொனால்ட் டிரம்ப் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... டிரம்ப் ஆட்டம் ஆரம்பம்!
இந்த நிலையில், அதிபரைத் தீர்மானிக்கும் போர்க்கள மாகாணங்களில் ஒன்றான மற்றும் கடைசி மாகாணம் அரிஸோனாவிலும் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். 4 நாள்களாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில், டிரம்ப் வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதன்மூலம், போர்க்கள மாகாணங்கள் ஒன்றில்கூட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் வெற்றி பெறவில்லை என்று கூறுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போலாந்தில் கூடுதலாக 5,000 அமெரிக்க வீரா்கள் நிறுத்தம்

ஆப்பிரிக்காவில் ஐஎஸ்-ன் இரண்டாம் நிலை தளபதி கொலை: டிரம்ப்

தைவான் விவகாரத்தைத் தவறாக கையாள்வது மோதலைத் தூண்டும்

சீனாவில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் - ஷி ஜின்பிங்குடன் இன்று பேச்சு; எலான் மஸ்க், என்விடியா சிஇஓவும் வருகை
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



